செவ்வாய், 16 நவம்பர், 2010

அரச காணியில் அத்துமீறி குடியேறியோரை வெளியேற்றுமாறு ஜனாதிபதி உத்தரவு!

யாழ். மாவட்டத்தில் அரச காணி களில் அத்துமீறி குடியேறியுள்ள மக்களை வெளியேற்றுமாறு ஜனா திபதி மகிந்த ராஜபக்­ தமக்கு அறி வித்துள்ளார் என பாரம்பரிய கைத் தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இலங்கை கைத்தொழில் அபி விருத்தி சபையின் அனுசரணை யுடன் முதலீட்டு ஊக்குவிப்பு கருத் தரங்கு நேற்று யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,இவ்வாறு அரச காணிகளில் அத்து மீறி குடியேறியவர்கள் தமிழர் களாக இருக்கலாம் அல்லது சிங் களவர்களாக இருக்கலாம் அரசின் கொள்கை ஒன்றுதான் எனவும் ஜனா திபதி குறிப்பிட்டுள்ளார்.

நாவற்குழியில் தேசிய வீடமைப்பு அதிகார சபைக்கு சொந்தமான காணியில் சிங்கள மக்கள் அத்து மீறி குடியேறினார்கள். இதனை தமக்கு சாதகமாகப் பயன்படுத்தி சில தமிழ்க் குடும்பங் களும் அரச காணிக்குள் குடியேறியுள்ளனர்.இவ்வாறு அத்துமீறி அரச காணி களில் குடியேறியுள்ள மக்களை வெளியேற்றுமாறு ஜனாதிபதி மகிந்த ராஜபக்­ எனக்கு அறிவித்துள்ளார்.அத்துடன் வீடமைப்பு அதிகார சபைக்கு சொந்தமான காணி என்பதனால் வீடமைப்பு அபிவிருத்தி அமைச்சர் விமல் வீரவன்சவும் அம் மக்களை வெளியேற்றுமாறு என் னிடம் கேட்டுள்ளார்.

அரச காணிகளில் அத்து மீறி குடியேறியுள்ள மக்களை வெளி யேற்றுவது அரசின் கொள்கை என்ற வகையில் தமிழர்களோ, சிங் களவர்களோ அனைவருக்கும் ஒரே கொள்கை என ஜனாதிபதி குறிப் பிட்டுள்ளார் எனவும் அமைச்சர் டக் ளஸ் தேவானந்தா தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

அண்மையில் ஜே.வி.பி. உறுப் பினர்கள் கடுமையாக தாக்கப்பட்ட நிலையில் யாழ்.போதனா வைத் தியசாலையில் அனுமதிக்கப்பட்டி ருந்தனர். அவர்களை நான் நேரில் சென்று பார்வையிட்டேன். அவர்கள் அரசுக்கெதிரான நட வடிக்கைகளில் ஈடுபடும் நோக்கோடு வந்துள்ளனர் எனக் கருதியே அவர்கள் தாக்கப்பட்டுள்ளனர். அவர்களைத் தாக்கியவர்கள் வன்மையாக கண்டிக்கப்பட வேண் டியவர்கள். இவ்வாறான குழப்பங்களை ஏற்படுத்தி மீண்டும் ஓர் அழி விற்கு நாட்டினை இழுத்துச் செல்லக் கூடாது. மக்கள் அனைவரும் இன, மத, பேதமின்றி ஒற்றுமை யாக வாழவேண்டும்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல