செவ்வாய், 16 நவம்பர், 2010

யுனெஸ்கோ நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது

ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டு அமைப்பானது (UNESCO), ஐக்கிய நாடுகள் சபையின் (UNO) முக்கிய துணை நிறுவனங்களில் ஒன்று.

1945 ஆம் ஆண்டு நவம்பர் 16 ஆம் திகதி உருவான இந் நிறுவனம், இதன் உறுப்பு நாடுகளிடையே, கல்வி, அறிவியல், பண்பாடு மற்றும் தொடர்புத் துறைகளில் ஒத்துழைப்பை ஊக்குவித்து வருகிறது. மேற்படி துறைகள், மனித மனங்களில் சமாதானத்தைக் கட்டியெழுப்புவதான நோக்கத்தை அடைவதற்கான வழியாக இருக்கின்றன என்ற அடிப்படையைக் கொண்டே இந் நிறுவனம் இயங்கி வருகின்றது.

இவ்வகையான ஒத்துழைப்பினால் உலகில் அமைதியையும், பாதுகாப்பையும் ஏற்படுத்தி, அதன் மூலம் இன, மொழி, மத, பால் வேறுபாடின்றி, உலக மக்கள் அனைவருக்குமான நீதி, சட்ட விதிமுறைகள், மனித உரிமைகள், மற்றும் ஐக்கிய நாடுகள் உரிமை ஆவணத்தில் அறிவிக்கப்பட்டிருக்கும் அடிப்படை சுதந்திரம் ஆகியவற்றிற்கு உலகளாவிய ரீதியில் கிடைக்கும் மதிப்பை உறுதி செய்வதே இவ்வமைப்பின் நோக்கமாகும்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல