செவ்வாய், 16 நவம்பர், 2010

யாழ். தமிழ் மக்கள் எம்மைத் தாக்கவில்லை; அடித்துக்கூறுகிறார் ஹந்துனெத்தி

யாழ்ப்பாணத்தில் தம்மீது தாக்குதல் நடத்தியது யாழ்ப்பாண தமிழ் மக்கள் அல்லவென மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துனெத்தி தெரிவித்துள்ளார்.

தம்மீதான தாக்குதல் திட்டமிட்ட செயல் என கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் தெரிவித்தார்.

இங்கு கருத்து தெரிவித்த அவர் எம்மைத் தாக்கிய போது நாங்கள் ஓடினோம். அப்போது சத்தமிட்டபோது மக்கள் பலர் ஒன்று கூடினர். அந்த மக்கள் இணைந்து சத்தமிட்ட பின்னரே எம்மைத் தாக்கியவர்கள் ஓட ஆரம்பித்தனர். அவர்கள் சென்றபோதும் வெளியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த எங்களுடைய வாகனங்களுக்கு சேதம் விளைவித்தனர்.

ஆணிகள் பொருத்தப்பட்டிருந்த பொல்லை அவர்கள் வைத்திருந்தனர். எந்த பக்கம் திருப்பினாலும் ஆணி இருக்கும் அதில். அதனை எங்கள் வாகன டயர்களில் அவர்கள் வைத்து சென்றனர். பாதையில் சென்றுக் கொண்டிருந்த போது நடத்தப்பட்ட தாக்குதல் அல்ல இது. எங்களை கயிற்றில் கட்டி நாங்கள் யார் என நன்றாகத் தெரிந்துக் கொண்டு, பாராளுமன்ற உறுப்பினரான நான் இருப்பதையும் அறிந்துக் கொண்டு திட்டமிட்டு தாக்குதல் நடத்தியுள்ளனர்.

திடீரென இடம்பெற்ற தாக்குதல் அல்ல இது. இங்கு காணப்படும் கேலிக்குறிய இந்த விடயம் இடம்பெற்ற 6.45 அளவில் நாங்கள் பொலிஸாருக்கு அறிவித்து படையினருக்கு அறிவித்து அவர்களையும் அவ்விடத்திற்கு அழைத்துக் கொண்டோம்.

நீதி அடிப்படையில் ஏதாவது செய்து கொள்ள நாங்கள் வாக்குமூலங்கள் எடுத்துக் கொண்டிருந்தோம். வைத்திய சாலைக்கு செல்லமால் ரத்தம் வடிய பொலிஸாரிடம் நீதி கோரி நின்றோம்.

யாழ்ப்பாண தமிழர்கள் எங்கள் மீது தாக்குதல் நடத்தியதாக அறிவித்தனர். இதன் மூலம் தெரிவிகின்றது யார் தாக்குதல் நடத்தினார்கள் என்று. வாக்குமூலம் பெறுவதற்கு எங்களை தாக்கிய யாழ் தமிழர்கள் என இராணுவ பேச்சாளருக்கு எப்படி தெரியும்.

சம்பவம் நடப்பதற்கு முன்னர் அரசாங்க பேச்சாளர்களுக்கு சம்பவம் தெரியுமானால் உங்களுக்கு சொல்ல வேண்டியதில்லை யார் தாக்கியதென்று. நாங்கள் உறுதியாகக் கூறுகிறோம் யாழ் தமிழ் மக்களோ, தமிழ் அரசியல் கட்சிகளோ இந்தத் தாக்குதலின் பின் இல்லை. இராணுவ புலனாய்வுப் பிரிவினரே இதனை செய்தனர். என அவர் தெரிவித்துள்ளார்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல