செவ்வாய், 16 நவம்பர், 2010

தாயாரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த முயன்ற மகன்

தனது 53 வயது தாயாரை பாலியல் வல்லுறவுக்குட்படுத்த முயன்ற குற்றச்சாட்டில் 22 வயது மகனொருவர் கைதுசெய்யப்பட்ட சம்பவம் பித்தானியாவில் இடம்பெற்றுள்ளது.

பேர்க்ஷியல் ஸ்லோ எனும் இடத்திலுள்ள வீட்டில் தனது தாய், பராமப்பு தாதி மற்றும் சகோதரி சகிதம் வசித்து வந்த இளைஞனே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளான்.

சம்பவதினம் தாயாருடன் வீட்டில் தனிமையில் இருந்த இளைஞன் தாயாரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த முயற்சிக்கவும், தாயார் இளைஞனை தாக்கி தப்பிக்க முயற்சித்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த இளைஞன் தாயாரின் கண்கள் இரண்டையும் தோண்டி அவரைக் குருடாக்கியுள்ளான்.

அதன் பின்னரும் சினம் தணியாத இளைஞன் வீட்டிலிருந்த கணினி மற்றும் தொலைக்காட்சி என்பவற்றை தோட்டத்தில் வீசி எறிந்து விட்டு, வீட்டை விட்டு நிர்வாணமாக ஓடியுள்ளான்.

நடுவீதியில் நிர்வாணமாக அங்கும் இங்கும் ஓடிய இந்த இளைஞனால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதன்போது இளைஞன் வீதியில் வேகமாக வந்த வாகனத்தில் மோதுண்டு கீழே விழுந்துள்ளான்.

இதனையடுத்து சம்பவ இடத்துக்கு பொலிஸார் வந்தபோதே உண்மை வெளிச்சத்துக்கு வந்தது.

கண்கள் தோண்டப்பட்டு கீறல் காயங்களுக்கு உள்ளாகியுள்ள தாய் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இளைஞன் மன ஆரோக்கியம் பாதிக்கப்பட்டவனா என அறிய அவன் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளான்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல