திங்கள், 22 நவம்பர், 2010

மகள் - மருமகனுக்கிடையில் சண்டை சமாதானப்படுத்தச் சென்ற மாமனார் பலி

குடும்பத் தகராறு காரணமாக மருமகனுக்கும் மகளுக்கும் இடையில் ஏற்பட்ட சண்டையை சமாதானப்படுத்தச் சென்ற மாமனார் பொல்லால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் திருகோணமலையில் இடம்பெற்றுள்ளது.

திருகோணமலை, சாம்பல்தீவு சல்லி என்னும் இடத்தைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான பூலோகராஜா (வயது 46) என்பவரே இச் சம்பவத்தில் உயிழந்தவர் என உப்புவெளி பொலிஸார் தெரிவித்தனர்.

குடும்பத் தகராறு காரணமாக மருமகனுக்கும் மகளுக்கும் இடையில் ஏற்பட்ட சண்டையை சமாதானப்படுத்தச் சென்ற மாமனார் மீதே மருமகன் பொல்லால் தாக்கியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மருமகனின் அடி மாமனாரின் தலையில் பட்டதன் காரணமாகவே மாமனார் அந்த இடத்திலேயே உயிரிழந்துள்ளார். அவரின் சடலம் திருகோணமலை பொது வைத்திய சாலைக்குக் கொண்டுவரப்பட்டு அங்கு பிரேத பரிசோதனையும் மேற்கொள்ளப் பட்டதன் பின்னர் சடலம் உரிய தரப்பினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, உயிழந்தவரைத் தாக்கியவர் என்ற சந்தேகத்தின் பேரில் அவரின் மருமகனைக் கைதுசெய்துள்ளதாகத் தெரிவித்த பொலிஸார், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல