திங்கள், 22 நவம்பர், 2010

யாழில் சாட்சியமளித்த சிறுமியின் தாயாரை கண்டுபிடிக்க நடவடிக்கை

தனது தாயை தேடித் தருமாறு யாழ்ப்பாணத்தில் நல்லிணக்க ஆணைக்குழு முன் கோரிக்கை விடுத்த 13 வயதான இலக்கியா என்ற சிறுமியின் தாயாரை கண்டுபிடிப்பது தொடர்பில் நடவடிக்கைகளை எடுத்து வருவதாக ஆணைக்குழுவின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அந்த வகையில் இது தொடர்பில் குறிப்பிட்ட தினத்தன்று அப்பகுதியில் கடமையில் இருந்த இராணுவ அதிகாரிகளிடம் விசாரித்து முடியுமான தகவல்களை பெற்றுத்தருமாறு ஆணைக்குழு பாதுகாப்பு செயலாளருக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைக்கவுள்ளதாகவும் அந்த அதிகாரி கூறினார்.

மேலும் பாதிக்கப்பட்ட மக்கள் தங்கியிருந்த அனைத்து வைத்தியசாலைகளிலும் அக்காலப்பகுதியில் பராமரிக்கப்பட்ட பதிவு புத்தகங்களை ஆராய்ந்து பார்ப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

குறித்த சிறுமியின் சாட்சியம் உணர்வுபூர்வமாக இருந்ததாகவும் அது தொடர்பில் ஆணைக்குழு முடியுமானவரை முயற்சிகளை மேற்கொள்வதாகவும் ஆணைக்குழுவின் அதிகாரி கூறினார்.

அண்மையில் யாழ்ப்பாணம் சாவகச்சேரியில் நடைபெற்ற கற்றறிந்த பாடங்களும் தேசிய நல்லிணக்கம் தொடர்பான ஆணைக்குழுவின் முன்னிலையில் சாட்சிய மளித்த 13 வயதான இலக்கியா என்ற சிறுமி, தனது தாய் 2009 ஆம் ஆண்டு சிகிச்சை அளிப்பதற்கென அழைத்துச் செல்லப்பட்டதாகவும் அதன் பின்னர் அவர் தொடர்பில் எந்த தகவலும் கிடைக்கவில்லை என்றும் கூறியிருந்தார்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல