திங்கள், 22 நவம்பர், 2010

இந்தோனேசிய பணிப்பெண் சவுதி அரேபியாவில் படுகொலை

சவூதி அரேபியாவில் பணிப்பெண்ணாக பணியாற்றச் சென்றவேளை தனது எஜமானார்களால் படுகொலை செய்யப்பட்டு சடலமாக வீதியோரத்தில் கைவிடப்பட்ட பெண் தொடர்பான விசாரணைகளை முன்னெடுக்க இந்தோனேசியா ஜனாதிபதி சுஸிலோ பம்பாங் யுதோ யொனோ பணித்துள்ளார்.

கிகிம் கோமலாஸா (36 வயது) என்ற இந்த பணிப் பெண்ணின் படுகொலை சம்பந்தமான விசாரணைகளை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்க சவூதி அரேபிய நகரான அபாவுக்கு குழுவொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார்.
சுமியதி பின்தி சலான் முஸ்தபா

ஏற்கனவே சுமியதி பின்தி சலான் முஸ்தபா என்ற இந்தோனேசிய பணிப்பெண் கடும் சித்திரவதை செய்யப்பட்டு மெதினா நகரிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்ற நிலையிலேயே இந்த படுகொலை செய்தி வெளியாகியுள்ளது.

சுமியதி என்ற பணிப்பெண் கத்தரிக்கோலால் உதடுகளும் முகமும் வெட்டப்பட்டு இரும்புக் கோலால் சுடப்பட்டு பல்வேறு உட்காயங்களுக்கும் ஆளான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல