திங்கள், 30 ஜூன், 2014
மாயமான மலேசிய விமானத்தில் 'பவர்கட்': யாராவது கடத்தி இருக்க வாய்ப்பு அதிகம்
மாயமான மலேசிய விமானத்தில் திடீர் என்று மின் வினியோகம் துண்டிக்கப்பட்டது அதை யாராவது கடத்தியிருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.
Labels:
மாயமான மலேசிய விமானம்
"பத்தாயிரம் பேருடன் நான் படுக்கையை பகிர்ந்தவள்..."
Gwyneth Montenegro
"நான் பத்தாயிரம் பேருடன் படுக்கையை பகிர்ந்தவள்" என்று விபச்சார தொழிலில் கொடிகட்ட பறந்த 36 வயது பெண்மணி தனது சுயசரிதை புத்தகத்தில் பெருமையோடு தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரை சேர்ந்தவர் ஜிவைனத் மோன்டேனேக்ரோ. தற்போது 36 வயதாகும் இப்பெண்மணி தனது 21 வயதில் பாலியல் தொழிலுக்குள் புகுந்தார். தற்போது ஓய்வு எடுத்துவிட்டு வேறு தொழில் செய்து வரும், ஜிவைனத் தனது அனுபவங்களை சுயசரிதை புத்தகமாக்கி வெளியிட்டுள்ளார்.
Labels:
பாலியல்,
வினோதமான செய்திகள்
சனி, 28 ஜூன், 2014
முன்நீரிழிவு நோய் வருவதற்கான 5 அறிகுறிகள்!!!
நீரிழிவு நோய் உள்ளதா என்று பரிசோதனை செய்து விட்டு, அப்படி எதுவும் இல்லை என்று திருப்தியுடன் வெளியே வந்து விட்டீர்களா? ஆனால், உங்களுக்கு முன்நீரிழிவு வந்திருந்தால் எப்படி அறிந்து கொள்வீர்கள்?
Labels:
நோய்கள்
கூச்சநாச்சமில்லாத உலகமிது.... தமிழ் சினிமாவில் பாய்கிறது ராஜபக்சே பணம்!
தமிழர்களின் வாழ்வில் அதிகநேரத்தை ஆக்கிரமிப்பது சினிமாதான், ஏதோ ஒரு வகையில்.அரசியல் என்றாலும் சினிமாதான் தீர்மானிக்கும் சக்தியாகத் திகழ்கிறது. ஒரு இலக்கியக் கூட்டத்தை பிரமாண்டமாக்க வேண்டுமென்றால் ஒரு சினிமாக்காரர் இருந்தால் போதும். ஒரு போராட்டமா... அதை முன்னெடுக்க ஒரு சினிமா நட்சத்திரம் வந்தால் மாபெரும் வெற்றிதான்.
Labels:
இலங்கை,
தமிழர்கள்,
பிரபாகரன்,
புலிகள் இயக்கம் (LTTE)
புதன், 25 ஜூன், 2014
ஈழத்தமிழர் மரணத்தில் பணம் சம்பாதித்த இஸ்ரேலியர்கள்
"1984, சிங்கள இராணுவத்திற்கும், தமிழ்ப் போராளிகளுக்கும், இஸ்ரேலியர்கள் ஒரே நேரத்தில் இராணுவப் பயிற்சி வழங்கினார்கள். எதிரிகளான இரண்டு குழுக்களும் இஸ்ரேலில் ஒரே முகாமில் தங்க வைக்கப் பட்டு பயிற்சியளிக்கப்பட்டது. இலங்கையில் போர் தீவிரமடைந்தால், ஆயுதங்கள் விற்று பணம் சம்பாதிப்பதே இஸ்ரேலிய அரசின் நோக்கம்."(By Way of Deception: The Making of a Mossad officer) "இஸ்ரேலிய உளவு நிறுவனமான மொசாட், முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். காலத்தில் இருந்தே இலங்கைப் பிரச்சினையில் தலையிட்டு வந்துள்ளது. அப்போதைய பாதுகாப்பு அமைச்சர் லலித் அத்துலத் முதலி தொடக்கம், இன்றைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச வரையில் யுத்தத்தை நடத்துவதற்கு மொசாட் வழிகாட்டி வந்துள்ளது. இலங்கையில் ஈழப்போரை முடிக்க விடாது தொடர்வதற்காக, மொசாட் இந்தியாவிலும் செல்வாக்கு மிக்க பெரும்புள்ளிகளை வளைத்துப் போட்டது. RAW விற்குள்ளும் மொசாட் ஆட்கள் இருந்தனர். இந்தியப் படைகளை அனுப்பி போரை முடிவுக்கு கொண்டு வந்ததாலும், இஸ்ரேலிய ஆயுதங்கள் பிடிபட்டதாலும், ராஜீவ் காந்தியை மொசாட் தீர்த்துக் கட்டியிருக்கலாம். பழியை புலிகள் மீது சுமத்துவதற்கு சுப்பிரமணிய சுவாமி போன்ற மொசாட் கையாட்கள் உதவினார்கள்."
Labels:
இலங்கை,
கட்டுரைகள்
இனவாதத்தை கைவிடாதவரை இலங்கைக்கு விடிவில்லை
இலங்கையைக் குழப்புகிறதுக்காக அமெரிக்கா முயற்சித்துக் கொண்டிருக்கு. இதுக்காகத்தான் அது பொதுபலசேனாவை ஊக்கப்படுத்துது. பொதுபலசேனாவை வைச்சு முஸ்லிம்களுக்கு மேல தாக்குதல் நடத்தி, அவர்களை அரசாங்கத்துக்கு எதிராக மாத்த முயற்சிக்குது. அப்பிடிச் செய்தால் முஸ்லிம் மக்களின் வாக்குகளைப் பிரிச்சு மகிந்த ராஜபக்ஸ அரசாங்கத்தைக் கவிழ்த்து விடலாம் எண்டு அது நினைக்குது. முந்தி இப்பிடித்தான் நோர்வே ஊடாக விடுதலைப்புலிகளைப் பலப்படுத்தினது' எண்;டு விமல் வீரவன்ச ஒரு கண்டுபிடிப்பைச் செய்திருக்கிறாரல்லோ...
Labels:
வடபுலத்தான்
செவ்வாய், 24 ஜூன், 2014
மருத்துவம் படிக்க முடியாது; பொறியியல் படிக்கலாம்: இலங்கை அகதிகள் முகாம் மாணவியின் சோகம்
இலங்கை அகதிகள் முகாமில் தங்கி தமிழகத்தில் கல்வி பயின்றவர்களுக்கு, இந்திய குடியுரிமை இல்லை என்பதால், தகுதி அடிப்படையில் மருத்துவம் படிக்க அனுமதி மறுக்கப்படுகிறது. அதே நேரத்தில், அவர்கள் பொறியியல் கலந்தாய்வுகளில் பங்கேற்று, படிக்க வாய்ப்பு அளிக்கப்படுகிறது. இந்த பாரபட்சம் வருத்தத்தை ஏற்படுத்துவதாக அகதிகள் முகாமைச் சேர்ந்தவர்கள் தெரிவித்தனர்.
Labels:
தமிழர்கள்
திங்கள், 23 ஜூன், 2014
ஞாயிறு, 15 ஜூன், 2014
வெள்ளி, 13 ஜூன், 2014
இந்து மதத்தின் கடைசி சடங்குகளில் பெண்கள் ஏன் ஈடுபடுவதில்லை?
பெண்கள் என்று வரும் போது, இந்து மதத்தில் பல விதிமுறைகளும் ஒழுங்கு முறைகளும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதில் சில விதிமுறைகள் பெண்களுக்கு பயன் அளிப்பதாகவும், சரியானதாக பட்டாலும் கூட, பல விதிமுறைகள் மூட நம்பிக்கைகளை ஊக்குவிப்பதாக இருக்கும். மேலும் முக்கியமான சடங்குகளில் இருந்து பெண்களை ஒதுக்கப்படும் விதமாகவும் அமைகிறது.
Labels:
பெண்கள் பக்கம்
செவ்வாய், 10 ஜூன், 2014
நிகழ்காலக் காட்சிகள் சில!
இடம் – ஒட்டுசுட்டான் பிரதேச செயலர் பிரிவு
ஒரு வயசு போன மனுசி காலமை பதினொரு மணிக்கு தன்ரை காணிப்பிரச்சினையைப் பற்றிக் கதைக்க வருது. வந்து, கந்தோரில இருக்கிற ஆட்களிட்ட விசாரிக்குது. கந்தோரில இருக்கிறவை ஆள் மாறி ஆளைக் காட்டிக் கொண்டிருக்கினம். மனிசி ஒவ்வொருத்தரிட்டயும் போய்ப்போய்த் தன்ரை பிரச்சினையைச் சொல்லத் தொடங்க, ஒவ்வொருத்தரும் மற்ற ஆளைக் காட்டிக் கொண்டிருக்கினம்.
ஒரு வயசு போன மனுசி காலமை பதினொரு மணிக்கு தன்ரை காணிப்பிரச்சினையைப் பற்றிக் கதைக்க வருது. வந்து, கந்தோரில இருக்கிற ஆட்களிட்ட விசாரிக்குது. கந்தோரில இருக்கிறவை ஆள் மாறி ஆளைக் காட்டிக் கொண்டிருக்கினம். மனிசி ஒவ்வொருத்தரிட்டயும் போய்ப்போய்த் தன்ரை பிரச்சினையைச் சொல்லத் தொடங்க, ஒவ்வொருத்தரும் மற்ற ஆளைக் காட்டிக் கொண்டிருக்கினம்.
Labels:
வடபுலத்தான்
திங்கள், 9 ஜூன், 2014
பெண்களை ஏமாற்றி பணம் பறிக்கும் முன்னாள் புலிகள்!
மானிப்பாய் மற்றும் கோப்பாய் பொலிஸ் நிலையங்கள் மீது யாழ்ப்பாண பெண் ஒருவர் பயங்கரவாத தாக்குதல் நடத்த உள்ளார் என்று லண்டனில் இருந்து கிடைத்த தொலைபேசி முறைப்பாடு தொடர்பாக பொலிஸ் புலனாய்வாளர்கள் உண்மையை கண்டு பிடித்து உள்ளனர்.
Labels:
தமிழர்கள்,
பிரபாகரன்,
புலிகள் இயக்கம் (LTTE)
ஞாயிறு, 1 ஜூன், 2014
சவுதியில் மனைவியை விபசாரத்தில் தள்ளிய கணவருக்கு 8 ஆண்டுகள் சிறை- 1000 சவுக்கடி
ரியாத்: மனைவியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்ட கணவருக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ஆயிரம் சவுக்கடி வழங்குமாறு சவுதி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Labels:
இஸ்லாம்
ஒரே தாதியிடம் பால் குடித்ததால்... 25 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்த தம்பதியைப் பிரித்தது சவுதி கோர்ட்
ரியாத்: குழந்தைகளாக இருந்த போது ஒரே தாயிடம் பால் குடித்ததற்காக, சுமார் 25 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்து 7 குழந்தைகளைப் பெற்றெடுத்த தம்பதியைப் பிரிந்து வாழ உத்தரவிட்டுள்ளது சவுதி நீதிமன்றம்.
Labels:
அரபு நாட்டு அராஜகங்கள்,
இஸ்லாம்,
வினோதமான செய்திகள்
பிரச்சினைகளை இப்படி கையாளுங்கள்
பிரச்சினைகள் வரும்போது, புத்தரும் காந்தியும் அதை எப்படி அணுகியிருப்பார்கள் என யோசியுங்கள்... வன்முறையற்ற, அன்பு அணுகுமுறை எல்லோருக்கும் கூட சாத்தியம் ‘புத்தராகவும், காந்தியாகவும் நடந்துக்கிறதென்ன அவ்வளவு சுலபமா... அதெல்லாம் நடக்கிற காரியமா?’ என்றார்கள் பலரும். புத்தர் மாதிரியோ, காந்தி மாதிரியோ நடந்து கொள்வது யாருக்கும் சாத்தியம்தான். ஆனால், அதற்கொரு முனைப்பு வேண்டும்! அதெல்லாம் முடியாது என்கிறவர்களுக்கு ஒரு வழி இருக்கிறது. பெரிய முனைப்போ, முயற்சியோ தேவைப்படாத எளிய வழி அது. ‘தவிர்ப்பது’ என்பதே அந்த வழி. ஆங்கிலத்தில் ‘ரெஸ்ட்ரெயின்’ என்கிறோம்.
Labels:
பலதும் பத்தும்
சூடுபிடிக்கப் போகும் திருத்த சர்ச்சை
இலங்கை அரசியலில், 13ஆவது திருத்தச்சட்ட விவகாரம் இனிச் சூடு பிடிக்கப் போகிறது. கடந்த வாரம் புதுடில்லியில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்திருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவிடம் இந்தியத் தரப்பில் இந்த விவகாரம் தான் முக்கியமாக வலியுறுத்தப்பட்டுள்ளது.
Labels:
கட்டுரைகள்
மலவாயில் அரிப்பு
“சரியான அரிப்பு” என்று சொன்னவரது கை பின் பக்கமாகப் போன வேகத்தைப் பார்த்தபோது வேட்டியைப் பிடுங்கி எறிந்து போட்டுச் சொறிவாரோ எனப் பயம் வந்தது. ஆனால் செய்யவில்லை. “தானைப் புழுத் தொல்லை என்னை விட்டுப் போகுதில்லை” என அலுத்துக் கொண்டார்.
Labels:
நோய்கள்,
மருத்துவம்
வாழைப்பழ தோசை
சில குழந்தைகள் தோசை சாப்பிட அடம் பிடிப்பார்கள். அப்படி அடம் பிடிக்கும் குழந்தைகளை தோசை சாப்பிட வைக்க வேண்டுமானால், வாழைப்பழ தோசை செய்து கொடுங்கள். இந்த தோசை சுவையாக இருப்பதோடு, செய்வதற்கு ஈஸியாகவும் இருக்கும். மேலும் இந்த தோசையை பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு டிபன் பொக்ஸில் கூட கொடுத்து அனுப்பலாம். அந்த அளவில் இந்த தோசை நீண்ட நேரம் சாப்பிடுவதற்கு ஏற்றவாறு இருக்கும். சரி, இப்போது அந்த வாழைப்பழ தோசையை எப்படி செய்வதென்று பார்ப்போமா? தேவையான பொருட்கள்:
Labels:
சமையல்
மலேஷியாவில் மரணமான இலங்கையர் தொடர்பில் மர்மம்!
மலேசியாவில் மரணமான இலங்கையர் தொடர்பில் மர்மம் நிலவுவதாக சந்தேகம் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த நபர் அவுஸ்திரேலியா அனுப்புவதாக ஏமாற்றியே கொலை செய்யப்பட்டுள்ளதாக அவரின் மனைவி குற்றஞ்சாட்டியுள்ளார்.
அவதானம்! இப்படியும் நடக்கிறது..
அன்பாகப் பேசி பெண்களை தங்கள் வலையில் சிக்க வைத்து அவர்களிடம் இருந்து தங்க நகைகள் பணம் என்பவற்றைச் சூறையாடும் சம்பவங்கள் சில திட்டமிட்ட நபர்களினால் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது தொடர்பில் ஹட்டன் பொலிஸ் குற்றப்பிரிவைச் சேர்ந்த சார்ஜன்ட் சிறிமல் நேரில் வந்து கூறிய சம்பவம் ஒன்றை வாசகர்களுக்கு தருகின்றோம்.
Labels:
கட்டுரைகள்,
வீரகேசரி
'ராஜபக்ஷே வருகையை எதிர்த்தது தவறு!'' - ஹரிஹரன்.
மோடியின் மேடைப் பேச்சுக்களை நாம் உற்றுக் கவனித்தால் சில விஷயங்களைப் புரிந்துகொள்ள முடியும். இந்தியப் பாரம்பரியத்தின் வேர்களை வளர்த்தெடுக்க வேண்டும் என்ற எண்ணம் அவருக்குள் ஊறிப்போய் இருப்பதை அதில் நாம் உணர முடியும். அந்த உணர்வுதான், சார்க் நாடுகளின் தலைவர்களை அவருடைய பதவியேற்புக்கு அழைக்க வைத்துள்ளது. இந்திய ரத்தத்தில் ஊறிப்போய் உள்ள பாரம்பரியப் பழக்கத்தின்படி விடுக்கப்பட்ட அழைப்பாக மட்டுமே இதைப் பார்க்க வேண்டும். பக்கத்து வீட்டுக்காரனோடு தீராத பகை இருந்தாலும், நம் வீட்டில் நடக்கும் சுப நிகழ்ச்சிகளுக்கு அவர்களை அழைப்போம் அல்லவா? அதுபோன்றதுதான் இந்தச் செயல்.
Labels:
கட்டுரைகள்
புலுடா ராமசாமிகளும் புண்ணாக்குத் தமிழர்களும்
பாராளுமன்றத் தெரிவுக்குழுவுக்குப் போகமாட்டோம் எண்டு சில நாட்களுக்கு முதல் செல்வம் அடைக்கலநாதன் சொன்னதைப் பற்றி இந்தப் பக்கத்தில எழுதினதைப் பார்த்திட்டுச் சில தேசியவாதிகள், 'செல்வத்தார் சொன்னதில என்ன பிழை? தெரிவுக்குழுவைப் புறக்கணிக்கிற கூட்டமைப்பின்ரை முடிவை நாங்கள் ஆதரிக்கிறம். ஏமாற்றுகிற நோக்கத்தோட இருக்கிற அரசாங்கத்தை அம்பலப்படுத்த வேணுமே தவிர, அதைப் பாதுகாக்கேலாது' எண்டு என்னோட சண்டைக்கே வந்திட்டினம்.
Labels:
வடபுலத்தான்
மோடி - மஹிந்த சந்திப்பின் பின் யாழ். மேயர் ஏற்படுத்திய குழப்பம்!
கடந்த செவ்வாய்க்கிழமை புதிய இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் சந்திப்பு நடைபெற்ற சமயம் அந்தச் சந்திப்பில் பங்குபற்றிய யாழ். மாநகர மேயர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா அந்தச் சந்திப்புக்குப் பின்னர் வெளியே வந்து அது குறித்து வெளியிட்ட கருத்து பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியிருப்பதாக 'த சண்டே ரைம்ஸ்' வார இதழ் செய்தி வெளியிட்டிருக்கின்றது.
Labels:
இலங்கை,
தமிழர்கள்,
யாழ் செய்திகள்
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)


































