1985 ஆம் ஆண்டு மார்ச் மாதம் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் வரலாற்று புத்தகங்கள் முதல் தட வையாக "டொட்கொம்' முகவரியுடன் இணையத்தளத்தில் பிரவேசித்தன.
அதே வருடம் மேலும் 5 கம்பனிகள் மேற்படி இணையத்தள முகவரியில் இணைந்துக் கொண்டன.
1997 ஆம் ஆண்டில் மில்லியனாவது "டொட்கொம்' முகவரி பதிவு செய்யப்பட்டது. ஒவ்வொரு மாத மும் சராசரியாக 668,000 டொட் கொம் இணையத்தள முகவரிகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.
தற்போது 1.7 பில்லியன் மக்கள் இணையத்தளத்தை உபயோகிக்கின்றனர்.
இது உலக சனத்தொகையில் கால் பங்காகும். ஒவ்வொரு நாளும் 53 பில்லியன் பேர் இணையத்தளங்களுக்கான கோரிக்கையை முன் வைக்கின்றனர். இணையத்தள "டொட்கொம்' முகவரியை பெற்றுக்கொள்ள 1985 ஆம் ஆண்டுக்கும் 2000 ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் 21 மில்லியன் பேரும் 2000 ஆம் ஆண்டுக்கும் 2010 ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் 57 மில்லியன் பேரும் பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக