தனது கணவரும் பிரான்ஸ் ஜனாதிபதியுமான நிகொலஸ் சார்க்கோஸியுடன் பிராந்திய தேர்தல்களில் வாக்களிக்க பாரிஸ் நகரிலுள்ள வாக்களிப்பு நிலையமொன்றுக்கு கார்லா புரூணி சென்று திரும்புகையிலேயே மேற்படி புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.
எனினும் இதன்போது சார்க்கோஸியும் கார்லா புரூணியும் வழமை போல் அந்நியோன்னிய தம்பதிகளாக தாம் இருப்பதாக காட்டிக் கொண்டதாக கூறப்படுகிறது. இந்த பிராந்திய தேர்தல்களில் நிகொலஸ் சார்க்கோஸியின் மத்திய வலதுசாரி “யு. எம்.பி.' கட்சி தோல்வியை தழுவ நேரிடும் என அரசியல் அவதானிகள் கருதுகின்றனர்.
இந்த தேர்தல்களிலான தோல்வியானது 2012 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தல் மற்றும் ஜனாதிபதி தேர்தல் என்பவற்றில் சார்க்கோஸிக்கு பாரிய அடியாக அமையும் என கருதப்படுகிறது.





கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக