திங்கள், 15 மார்ச், 2010

கல்கி ஆசிரமம் மீது ரஞ்சிதாவுடன் இருந்தபோது நான் சுயநினைவில் இல்லை - நித்தியானந்தா

நடிகை ரஞ்சிதா தனக்கு 'சேவை' செய்த சமயத்தில் நான் உடல்நலமின்றி சுயநினைவற்று சமாதி நிலையில் இருந்தேன் என்று அதிரடி பேட்டியளித்துள்ளார் நித்தியானந்தா.

ஹரித்துவாரில் தலைமறைவாக இருப்பதாகக் கூறப்படும் நித்தியானந்தா மேலும் ஒரு புதுப் பேட்டி அளித்துள்ளார். அதன் விபரம் வருமாறு:

ரஞ்சிதா விவகாரத்துக்கு முன்னரும் பின்னரும் யூ டியூப் வீடியோ தேடலில் நான்தான் உச்சத்தில் இருந்துள்ளேன். முன்னர் ஆன்மீகக்குரு என்ற அடிப்படையிலும், தற்போது மோசடிப் பேர்வழி என்ற வகையிலும் பெருளவில் வீடியோவில் காட்டப்படுகிறேன்.

எனது 33 ஆண்டுகள் பொதுவாழ்வில் இரண்டு எதிரெதிர் முனைகளையும், புகழின் உச்சத்தையும், ஏற்றத் தாழ்வையும் தொட்டு விட்டேன். இவை எனக்கு வாழ்க்கையின் பிறபரிமாணங்களைக் கற்றுத் தந்துள்ளன. இதுவரை பார்க்காத பரிமாணங்களை நான் கடந்த சில வாரங்களாகக் கண்டுவருகிறேன்.

எனக்கெதிராக இந்தளவுக்கு பகைமை உருவாகும் என்றோ,என்னை மக்கள் ஒரு எதிரியாக பார்ப்பார்களென்றோ நான் கனவிலும் நினைக்கவில்லை. இந்த கஷ்டமான நேரத்திலும் எனக்கு ஆதரவு தெரிவித்து லட்சக்கணக்கான இ-மெயில் கடிதங்கள், போன் அழைப்புகள்(?), ஆதரவு குரல்கள் உலகின் பல்வேறு மூலை முடுக்குகளில் இருந்தும் வந்து கொண்டிருப்பது எனக்கு ஆறுதல்.

என் தீவிர பக்தையான ரஞ்சிதாவுடனான வீடியோவில் நிறைய தவறான சித்தரிப்புகள்,இடைச்செருகல் மற்றும் மார்ஃபிங் வேலைகள் நடந்துள்ளன. எங்கெங்கு 'மார்ஃபிங்' செய்யப்பட்டுள்ளது என்பதை அறிய லண்டனுக்கு வீடியோவை ஆய்வுக்கு அனுப்பியிருக்கிறோம்.அதில் காணப்படும் காட்சிகள் எடுக்கப்பட்ட காலகட்டத்தில் நான் சுயநினைவற்ற நிலையில் இருந்தேன் என்பதே உண்மை!

Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல