திங்கள், 15 மார்ச், 2010

ஆஸ்மா நோய்க்கான காரணங்கள்

உங்களுக்கு அல்லது உங்கள் குடும்பத்தில் எவருக்காவது ஆஸ்மா நோய் இருக்கின்றதா என நோயாளியிடத்தில் கேட்டால் 'ஐயோ இல்லை' என்று தூக்கிவாரிப் போட்டுக் கொண்டு நோயாளி பதிலளிப்பார். சுவாசிப்பதற்கு கஷ்டப்படுகின்aர்களா, அடிக்கடி கக்குவான் இருமலா என்று கேட்டால் ஆம் இருக்கின்றது என்று சொல்வர்.

தமக்கு ஆஸ்மா நோய் இருப்பதாக அநேக ஆஸ்மா நோயாளிகள் பின்வாங்குகின்றனர். சுவாசிக்கும் போது கஷ்டப்படுவதும், சுவாசப் பைகளிலிருந்து ஒரு வித சத்தம் வருவதும் தமக்கு ஆஸ்மா நோய்தான் தாக்கியுள்ளது என்பதனை அனேகர் அறிய மாட்டார்கள். இந்த ஆஸ்மா எனப்படுகின்ற இதய காசநோய் பெரியவர் சிறியவர் என்று பாகுபாடின்றி அனைவரையும் தாக்கலாம்.

ஆஸ்மா என்பது சுவாசத் தொகுதியில் ஏற்படுகின்ற சுவாசக் குழல் அடிக்கடி சுருங்குதல் காரனமாக, சுவாசிப்பதற்கு கடும் சிரமத்தை ஏற்படுத்தும் நெடுநாட்களாகத் தங்கியிருக்கின்ற ஒரு நோயாகும்.

சூழல் மாசடைதல், துரித நசுரமயப்படுத்தப்படுத்தல் மற்றும் நிலத்தை அகழ்தல் நடவடிக்கைகளுடன் சம்பந்தப்பட்ட அபிவிருத்தித் திட்டங்கள் போன்ற செயற்பாடுகளால் ஆஸ்மா நோய் துரிதமாகப் பரவுகின்றது எனலாம். நகரப் புறங்களில் வாழும் பிள்ளைகளில் 40 சத வீதமானோருக்கு ஆஸ்மா நோயின் அறிகுறிகள் இருப்பதாக எடுக்கப்பட்ட கணிப்பீடுகளிலிருந்து தெரிய வந்துள்ளது.

ஆஸ்மா என்பது அனேகமாக பரம்பரை பரம்பரையாகத் தொடரக் கூடியதால் பெற்றோரில் எவருக்கேனும் ஆஸ்மா நோயிருப்பின் பிள்ளைகளுக்கும் நோய் தொற்றிக்கொள்வதற்கான அனேக வாய்ப்பிருக்கின்றது. ஆனால் இந்நோய் ஒருவரிடமிருந்து பிறிதொருவருக்குத் தொற்றக் கூடிய ஒரு நோயல்ல. பீனிஸம் சருமத்தில் தடிப்பம் போன்ற நோய் கூறுகள் இருப்பின் அவருக்கு ஆஸ்மா நோய் தாக்கக் கூடிய வாய்ப்பு பொதுவான ஒருவருக்கு நோய் தாக்குவதைவிடப் பத்து மடங்கு அதிகமாகும்.


நோய் தாக்குவது எப்படி?

சுவாசக்குழல் என்பது ஒருவருக்குக் காற்றை சுவாசப்பைவரைக் கொண்டு செல்லவும், சுவாசப் பையிலுள்ள அழுக்கடைந்த காற்றை வெளியேற்றவும் பயன்படுத்தும் ஒரு உறுப்பாகும்.

ஆஸ்மா நோயாளியொருவரின் இந்த சுவாசக்குழல் கடும் தாக்கத்திற்கு ஆளாவதால் இதனூடாகச் செல்லும் தூசு துணிக்கைகள் போன்ற அசுத்தங்களினால் கடும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றது. ஏதோ ஒரு கருமத்தில் ஒருவரது சுவாசக் குழாய் எதிர் தாக்கம் ஏற்படுத்தும்.

சாதாரண சந்தர்ப்பத்தில் கூட இந்த நோயால் தாக்கப்பட்டவர்களுக்கு அதேவிடயத்தில் பாதிப்பை ஏற்படுத்தலாம். இவ்வாறான அனைத்து எதிர்த்தாக்குதல் முயற்சியின் போதும் சுவாசக் குழாயின் உட்சுவரில் உள்ள தசைப்பகுதி உடனடிச் சுருக்கம் ஏற்படுகின்றது.

சுவாசக் குழலின் உட்சுவர் தசைப் பகுதி வீங்குதலும் அவற்றிலிருந்து அதிகமாக சளி வழிதலும் காரணமாக சுவாக் குழாயினுள் காற்றைக் கொண்டு செல்லும் பகுதி மென்மேலும் சுருங்கி சிறிதாகின்றது. இதனால் சுவாசிப்பது சிரமமாக இருப்பதோடு ஆஸ்மா நோயின் ஆரம்பக்கட்டம் மென்மேலும் தீவிரமடைகின்றது.


நோயின் அறிகுறிகள்

01. வறண்ட இருமல்

02. நெஞ்சில் ஒருவித களைப்பு (தீசிரிரிZரி)

03. நெஞ்சடைப்பு

04. சுவாசித்தலில் கடும் சிரமம்

05. மூச்சுவிடும்போது ருங்ருங் என்பது போன்ற ஒலி

மேற்கூறிய அறிகுறிகள் சாதாரண நிலையிலிருந்து மரண அபாய நிலை வரை அதிகரிக்கலாம். ஆஸ்மா நோயாளிகளின் நோய் உச்சக்கட்டமடைவது இரவு நேரங்களிலும் அதிகாலை நேரங்களிலுமாகும்.

அநேகமாக ஆஸ்மா நோய்த் தாக்கங்கள் பிள்ளைப் பருவதில் ஆரம்பித்த போதும் வயது செல்லச் செல்ல அநேகமானோருக்கு நோயின் தன்மை குறைவடையலாம். ஆனால் சிறுபிராயத்தில் ஆஸ்மா நோயினால் பாதிக்கப்பட்டோரில் 15 வீதமானோருக்கு வளர்ந்த பின்பும் நோய் மென்மேலும் அதிகரிக்க லாம்.

அவ்வாறே ஆஸ்மா நோயின் வெளி ப்படையான தாக்கமான தன்மை நோயாளியிடம் தொடர்ந்தும் இருப்பதி ல்லை. இது சிகிச்சை யளிப்பதன் தரத்தை அடிப்படையாகக் கொண்டு சிறுகச் சிறுக குறையலாம். ஆனால் மீண்டும் மீண்டும் நோய் தலைகாட்டிக் கொண்டே யிருக்கும். இது அடிக்கடி தலைகாட்டும் ஒரு நோய் என்பதால் அது வெளிப்படுவதற்குக் காரணமாயிருக்கின்ற நிலைமைகளை மிகத் தீவிரமாக கட்டுப்படுத் தப்படல் அவசியமாகும்.

சுவாச உறுப்புத் தொகுதி சம்பந்தப்பட்ட தாக்கம் (சளி சளிக்கட்டி போன்றன) தூசி, சிகரட் மற்றும் பீடி போன்ற புகைத்தலால் வெளி யேறுகின்ற நச்சுப் புகை, தாக்கத்தை ஏற் படுத்துகின்றவைகள் (செல்லப் பிராணிகளின் மலசலம், கோஷம், இந்திரியம், மருந்து வகைகள் ஒரு சில உணவு வகைகள், இரசாயனப் பொருட்கள் காற்றில் பறக்கின்ற ஒருசில மரங்களின் சின்னஞ்சிறு பூக்கள், குளிர்காற்று உளத்தாக்கம் (அதிக துக்கம், சந்தோஷம் அல்லது சிந்தையைக் கிளறி அல்லலுற வைக்கும் சம்பவங்கள்) போன்றன இந்நோய் அதிகரிப்பதற்கான முக்கிய சில காரணிகள் எனலாம்.

ஆஸ்மா நோய் முற்றிலும் குணப்படுத்தக் கூடிய நோயல்ல. ஆனால் திட்டமிட்ட நிலையில் சரியான சிகிச்சை பெற்று பராமரிப்பும் சரியாகக் கவனிக்குமிடத்து மீண்டும் மீண்டும் நோய் வெளிப்படுவதைத் தடுக்க முடிவதோடு நோயாளியும் துன்பமற்ற ஒரு சுமூகமான வாழ்வை ஏற்படுத்திக் கொள்ள முடிகின்றது.

நோயின் தாக்கம் அதிகரிக்குமாயின் அதன் தாக்கத்தைக் கட்டுப்படுத்த மற்றும் குறைக்க என்ற இரு அடிப்படையிலான சிகிச்சை முறைகள் இருக்கின்றன. ஆஸ்மா நோய்க்குச் சிகிச்சை பெற்றுக் கொள்ளும்போது அனேகமாக வாயிலிட்டு உள்ளே உறிஞ்சுகின்ற இன்ஹேலர் முறை சிபாரிசு செய்யப்படுகின்றது.

அனேக நோயாளிகள் இந்த இன்ஹேலர் முறையைப் பயன்படுத்தப் பின்வாங்குவதோடு அதனைப் பாவிக்கத் தொடங்கினால் ஆயுள் பூராவும் பாவிக்க வேண்டுமென அஞ்சுகின்றனர். ஆனால் இந்த இன்ஹேலர் முறையைத் தவிர்த்து மருந்து மாத்திரைகளை உட்கொள்வதால் நல்ல பிரதிபலனைத் தருவதோடு இடைத்தாக்கங்களும் அபாயங்களும் மட்டுப்படுத்தப்படலாம். ஆதலால் வைத்திய ஆலோசனையின்படி இன்ஹேலர் பாவிப்பது ஆபத்தாகாது.


ஆஸ்மா நோயைத் தவிர்த்தல்

வீட்டினுள் சேரும் தூசி மிகமுக்கியமாக அகற்றப்படல் வேண்டும். கட்டிலின் கீழ் மேசை, அல்மாரி மற்றும் மேல் தட்டுகளின் மேலுள்ள மற்றும் மின்விசிறிகளின் தட்டுக்களில் படித்திருக்கும் தூசி அகற்றப்படல் வேண்டும்.

படுக்கையறையின் முக்கிய கவனம் செலுத்தப்படல் வேண்டும். இருள் மற்றும் ஈரலிப்பு உள்ள இடங்களில் மிகக் கெதியாகவே நுண்ணுயிர்கள் உருவாக வாய்ப்பதிகமாகும். அதனால் அநேகமாக சாளரங்கள் கதவுகள் மற்றும் வீட்டினுள் சூரிய ஒளி பாயக்கூடியவற்றை திறந்து வைக்க வேண்டும்.

படுக்கையறையினுள் அடுக்கி வைக்கப்படும் பொருட்களையும் சாதனங்களையும் கூடியளவு குறைக்க வேண்டும். கட்டிலின் மெத்தை தலையணை விரிப்பு போன்றவற்றினூடாக நோய்த் தாக்கங்களையும் ஒவ்வாமையையும் ஏற்படுத்தக் கூடிய அதாவது சிலிஸிஷிரி ளிஸிஷிஹி ணியிஹிரி என்கின்ற நுண்ணுயிர்கள் உருவாவதைக் கூடியளவு தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

மேலும் சிறுபிள்ளைகள் வைத்து விளையாடுகின்ற பஞ்சு, புடவை மற்றும் மஸ்லின் துணிகள் போன்றவற்றால் தயாரிக்கப்பட்ட நாய், புலி, முயல் மற்றும் பறவைகள் போன்ற விளையாட்டுப் பொருட்கள் ஷிலிபிஹி ஹிலிவீஷி மற்றும் குஷன் செய்யப்பட்ட கதிரை செட்டுகளில் இந்த நுண்ணுயிர்கள் அநேகமாகக் காணப்படுகின்றன. ஆதலால் இவ்வாறான விளையாட்டுப் பொருட்களைச் சிறு பிள்ளைகளுக்கு வாங்கிக் கொடுப்பதைத் தவிர்த்துக் கொள்வதோடு அவ்வாறு வாங்கிக் கொடுத்தாலும் அவற்றை சோப்பிட்டுக் கழவிக் கொடுப்பது பற்றியும் கவனத்தில் கொள்ளவேண்டும்.

புகைத்தல் மற்றும் வேறுவிதமான புகைகள் நேரடித் தாக்கத்திலிருந்தும் தவிர்ந்து கொள்ள வேண்டும். வீட்டினுள் புகை புகுவதைத் தடுக்க வேண்டுமாயின் சமையலின் போது புகை வீட்டினுள் சுழல்வதைக் கூடியளவு தவிர்த்துக் கொள்ள முயற்சிக்க வேண்டும்.

விறகு அடுப்புக்களைப் பாவிப்போர் இதில் முக்கிய கவனம் செலுத்த வேண்டும். துரித பொருளாதாரம், மற்றும் பொருளாதாரம் உலக மயமாக்கள் என்ற பேரில் நாட்டில் நாலா பகுதியிலும் கைத்தொழில் சாலைகள் உருவானதோடு அவற்றை அண்மித்து வாழ்பவர்களுக்கு பொலித்தின், புடவை வெட்டுத் துண்டுகள், இறப்பர் துண்டுகள் என்று கட்பீஸ் வியாபாரம் என்ற தொழில் வளமும் உருவாயிற்று.

இதனால் இவர்கள் தொழிற்சாலைகளால் வெளியேற்றப்படும் கழிவுப் பொருட்கள், கட்பீஸ்களை தம்வீட்டுத் தோட்டங்களில் குவித்து விற்பனை செய்வதோடு மீதிகளை அவ்விடத்திலேயே எரித்து விடுகின்றனர். இதனால் அதன் சூழலில் வாழ்வோர் நச்சுப் புகைக்கு ஆளாவது பற்றி கவலைப்பட வேண்டும். சிகரெட் சுருட்டு மற்றும் பீடி புகைத்தல் தனக்கே கடும் தாக்கத்தை ஏற்படுத்துவதோடு நேரடியாக அதன் தாக்கத்திற்கு ஆட்படுவோரும் நோய்வாய்ப்படும் சாத்தியக் கூறுகள் அதிகம் என்றே சொல்ல வேண்டும்.

சில வீடுகளில் நீண்ட மயிருடைய பூனை, நாய்களைச் செல்லப் பிராணிகளாக வளர்ப்பதும், இப்பிராணிகளுடன் சேர்ந்து புரண்டு விளையாடுவதற்கும் கொஞ்சுவதற்கும் தம் பிள்ளைகளை அனுமதிப்பதும் இந்நோயை வீட்டினுள் செல்லமாக வரவழைத்துக் கொள்ளும் மற்றுமொரு வழியாகும். வீடுகளில் அங்குமிங்கும் மூலை முடுக்குகளில் ஓடி விளையாடும் கரப்பான் பூச்சிக்கு எதிரியாக இருப்பது ஆஸ்மா நோயை மட்டுப்படுத்தும் மற்றுமொழி வழியாகும்.

குளிர்காற்று மற்றும் வரண்ட காற்றைச் சுவாசித்தல் அதிக சிரமமாக நெடுநேரம் தேகாப்பியாசத்தில் ஈடுபடுதல், அதிகமான குளிரான உணவுகள், ஐஸ்கிரீம், குளிர்பானம் போன்றன அடிக்கடி பிரயோகிப்பதை தவிர்த்துக் கொள்வதும் ஆஸ்மா நோய்க்குத் தடை விதிக்கும் வழியெனலாம்.

வைத்திய பரிந்துரையின்றி மருந்து பாவிப்பதைத் தவிர்த்துக் கொள்வதோடு வேறொரு நோய்க்குச் சிகிச்சை பெறந் செல்லும் நோயாளிகள் ஆஸ்மா நோயால் பாதிக்கப் படுவோராயின் அது பற்றி வைத்தியரிடம் தெரிவிக்க வேண்டும். ஏனெனில் சில நோய்களுக்காக வைத்தியர் சிபாரிசு செய்யும் சில மருந்துகள் ஆஸ்மா நோயை அதிகரிக்கலாம்.

புதுமரக்கறி அழுகாத வகைகள், பழங்களுடன் கூடிய சமநிலை நிறை உணவு வேளையை அன்றாடம் உண்பதும், உடல் பருமனை அதிகரிக்காது பாதுகாத்துக் கொள்வதும், சிறந்த மனநிலையை உருவாக்கிக் கொள்வதும் மனவெழுச்சி, மன உழைச்சலற்ற அதிக கோபம் வராத சாதாரண சாந்தமான சூழலை உருவாக்கிக் கொள்வதும் ஆஸ்மா நோயைத் தடுத்துக் கொள்ள மற்றுமொரு சிறந்த வழியாகும்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல