இடி மின்னலுடன் மழைபெய்யும்போது மாட்டுச்சாணம், வைக்கோல், இத்துப்போன மரம், மக்கிப்போன இலை முதலான கமப் பொருட்கள் மீது இயற்கையாகவே தோன்றுவதுதான் இந்தக் காளான்கள். இவை இரவு நேரத்தில்தான் பூக்கும். ஏனென்றால் சூரியவளிச்சம் பூஞ்சைகளுக்கு ஆகாது.
காளானில் பல வகைகள் உண்டு என்றாலும் வெண்ணிறத்தில் ஒரு குடையினைப் பிடித்துக் கொண்டு நிற்குமே குடைக்காளானைத்தான் பரவலாக நாம் பார்க்கிறோம்.
நேற்று பெய்த மழையில் முளைத்த காளான்கள் என்றும் கூறுவோம் அல்லவா. காளான்கள் முளைத்தது மழைபெய்கின்ற ஒரு இரவில்தான் என்றாலும் தோன்றிய பின்னர் ஒரு சில நாட்கள் வரை பகலிலும் ஏன் நள்ளிரவிலும்கூட இவை குடைபிடித்தவாறே நிற்கும். காளான்களின் இந்த வாழ்வினை அடிப்படையாய் வைத்து எழுந்ததே மேற்கூறிய பழமொழி.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக