திங்கள், 15 மார்ச், 2010

ரகசிய தகவல்களை இ - மெயில் மூலம் பாதுகாப்பாக அனுப்பும் வழிமுறைகள்

நாம் அனுப்பும் இமெயில்கள் பாதுகாப்பற்றது என்பது பலருக்கு தெரிவ தில்லை. குறிப்பாக, ரகசிய தகவல்களை இமெயிலில் அனுப்பக்கூடாது என்ற அடிப்படை விஷயத்தைக் கூட பலர் தெரிந்து வைத்திருப்பதில்லை.

உண்மை மட்டுமல்ல. உறுதியாகவும் நாம் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டிய தகவலும் கூட. ரகசிய தகவல்களை எந்த வகையில் அனுப்பக்கூடாது? ஏன் பாதுகாப்பற்றது? என்பது பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்.

முதலில் அதி முக்கிய அந்தரங்கமான (பெர்சனல்) தகவல்களை (பாஸ்வேர்ட், வங்கி ரகசிய எண்கள் போன்றவை) வழக்கமான இமெயிலில் அனுப்புவது பாதுகாப்பானதில்லை என்று சொல்கின்றனர்.

ஒரு இமெயில் செய்தியை அனுப்புகையில் அந்த செய்தியை நீங்கள் எப்படி பார்க்கிறீர்களோ, அதே போல் அப்படியே அனுப்பப்படுகிறது.

நீங்கள் டைப் செய்திட்ட செய்தி டெக்ஸ்டாக இன்டர்நெட் வழியாக செல்கிறது.

ஆனால், இணையதளம் வழியாக ஒன்று செல்கையில் அது "ஏ' என்ற இடத்திலிருந்து "பி' என்ற இடத்திற்கு நேராக செல்வதில்லை. அதன் முடிவு எல்லைக்கு செல்லும் முன் குறைந்தது 8 அல்லது 10 கொம்பி யூட்டர்கள் வழியாக பயணம் செய்கிறது.

பெரும்பான்மையான நேரங்களில் ஒர் இமெயில் யாருக்கு அனுப்பப்படுகிறதோ அவர், அதனை திறந்து பார்க்கும் முன் வேறு எவரும் அதனை திறந்து பார்ப்பதில்லை.

இருப்பினும், கெடுதல் புத்தி உள்ள எவரேனும் இமெயில் செல்லும் வழியில் குறுக்கே புகுந்து அதனை படிக்க முடியும்.

நீங்கள் அனுப்பும் இமெயில் யாரும் பார்க்க இயலாத வகையில் என்கிரிப்ட் செய்யப்பட்டால் ஒழிய இந்த ஆபத்து ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் உண்டு.

இதில், என்கிரிப்ஷன் என எது குறிக்கப்படுகிறது எனப் பார்க்கலாம்.

1. முதலாவதாக நீங்கள் இமெயில் கிளையன்ட், அவுட்லுக் எக்ஸ்பிரஸ், எம்.எஸ். அவுட்லுக், தண்டர்பேர்ட், இடோரா போன்றவைகளில் ஒன்றை பயன்படுத்த வேண்டும். இணைய தளங்களைப் (யாஹூ, ஜிமெயில் போல) பயன்படுத்தி அனுப்பப்படும் இமெயில் செய்திகளை என்கிரிப்ட் செய்ய முடியாது.

2. ஒருவருக்கு இமெயில் என்கிரிப்ஷன் செய்து அனுப்ப வேண்டும் என்றால், அதனைப் பெறுபவர் இதன் கீ குறித்த தகவல்களை உங்களுடன் பகிர்ந்தவராக இருக்க வேண்டும். சரி. இந்த கீயினை எப்படி பெறுவது? அதனை எப்படி பயன் படுத்துவது? கவலைப்பட வேண்டாம்.

இணையத்தில் அதற்கும் ஒர் இலவச வசதி உள்ளது. நீங்கள் ஒரு கீயைப் பெற்றுவிட்டால் மற்றவர்கள் அதனைப் பயன்படுத்தி உங்களுக்கு என்கிரிப்ட் செய்யப்பட்ட இமெயில்களை அனுப்ப முடியும். அதற்கான வழிமுறைகள் பின்வருமாறு: http://www.comodo.com/products/certificate_services/email_certificate.html என்ற முகவரியில் உள்ள இணையத்தளத்திற்குச் செல்லவும்.

அங்கு சென்றவுடன் இலவசமாகக் பெறக்கூடிய சான்றிதழைப் பெற பதிவு செய்திடவும். உங்கள் சான்றிதழுக்கான படிவத்தினைச் சரியாக பெறவும்.

உங்களுடைய இமெயில் முகவரியினைச் சரியாகத் தர வேண்டும். அளவு என்பதில் highgrade என்பதனைத் தேர்ந்தெடுக்கலாம்.

இதன் பின் இமெயில் ஒன்று உங்களுக்கு அனுப்பப்படும். அந்த இமெயில் செய்தியில் உங்களுக்கான சான்றிதழை நீங்கள் எப்படி பயன்படுத்த வேண்டும் குறித்த என்பது தகவல்கள் இருக்கும்.

பட்டனில் கிளிக் செய்து சான்றிதழை இன்ஸ்டால் செய்திட வேண்டும்.

இந்த சர்டிபிகேட் இன்ஸ்டால் செய்தவுடன் இமெயில்களில் டிஜிட்டலாக கையெழுத்திடும் வழி உங்களுக்கு கிடைக்கும். அதாவது நீங்கள் மற்றவர்களுக்கு இமெயில் அனுப்புகையில், அந்த இமெயில் உங்களிடமிருந்து தான் வருகிறது என மற்றவர்கள் அறிந்து கொள்ள இதன் மூலம் முடியும். நீங்கள் இவ்வாறு டிஜிட்டல் வடிவில் கையெழுத்திட்ட இமெயில் அனுப்பியவுடன் அவர்கள் உங்களுக்கு என்கிரிப்ட் செய்யப்பட்ட இமெயிலை உங்களுக்கு அனுப்ப முடியும்.

அடுத்து எப்படி அந்த டிஜிட்டல் கையெழுத்தினை இட்டு மெயிலை என்கிரிப்ட் செய்வது என உங்கள் மனதில் கேள்வி எழும். அவுட் மனதில் கேள்வி எழும். அவுட்லுக் எக்ஸ்பிரஸ் அல்லது மற்ற இமெயில் கிளையண்ட் மூலம் இமெயில் செய்தி ஒன்றை தயாரித்தவுடன் sign என ஒரு பட்டன் இருப்பதனைப் பார்க்கலாம். அதில் ஜஸ்ட் ஒரு கிளிக் செய்துவிட்டு பின் வழக்கம்போல் இமெயிலை அனுப்புங்கள்.

உங்கள் மெயில் என்கிரிப்ட் செய்யப்பட்டு அனுப்பபடும்.

அப்படியானால் சர்டிபிகேட் இல்லாதவர் களுக்கு என்கிரிப்ட் இமெயில் அனுப்ப முடியாதா? என்ற கேள்வி உங்களுக்கு எழும்.

அனுப்பலாம். நீங்கள் அவுட்லுக் எக்ஸ்பிரஸ் பயன்படுத்துவதாக இருந்தால் அனுப்பலாம்.

அல்லது எம்.எஸ். அவுட் லுக்கை பயன்படுத்தினாலும் அனுப்பலாம்.

இதில் என்ன விந்தை என்றால், உங்கள் இமெயிலை பெறுபவர் எந்த இமெயில் கிளையண்ட்டையும் பயன்படுத்தலாம். வெப் சர்வர் இமெயில் வசதியையும் பயன்படுத்தலாம். இதற்கு உதவிடும் புரோகிராம் Comodo Secure Email என அழைக்கப்படுகிறது. இது முற்றிலும் இலவசமாகும். இந்த புரோகிராமினை டவுண்லோடு செய்து இன்ஸ்டால் செய்தால் போதும். பின் அந்த புரோகிராமினை இயக்கி அதில் தரப்படும் விஸார்டினை பயன்படுத்த வேண்டும். அப்போது, உங்களுக்கு ஒரு சர்டிபிகேட் வழங்கப்படும். அதன்பின் அதனை பயன்படுத்தி உங்கள் இமெயிலை என்கிரிப்ட் செய்து அனுப்பலாம். இத்தகைய இமெயிலை நீங்கள் ஒருவருக்கு அனுப்புகையில் அவரால் ஜஸ்ட் லைக் தட் படிக்க முடியாது.

உங்களை அந்த மெயில் ஒர் இணையதளத்திற்கு அழைத்துச் செல்லும்.
அங்கு சென்று நீங்கள் பாதுகாப்பாக உங்களுக்கு வந்துள்ள என்கிரிப்ட் செய்யப்பட்ட செய்தியை படிக்கலாம். மேலும், இது குறித்து அறிய http://secureemail.comodo.com/index.htmlஎன்ற தளம் சென்று புரோகிராமினை டவுண்லோட் செய்து அறிந்து கொள்ளவும்.

கொமாடோ நிறுவனம் தயாரித்து வழங்கும் இந்த இமெயில் பாதுகாப்பு சொப்ட்வெயார் ஒரு சிறந்த கவசமாக இயங்குகிறது. இது ஒரு டெஸ்க்டாப் அப்ளிகேஷன் புரோகிராம். இதுதானாகவே உங்கள் இமெயில் கடிதங்களுக்கு பாதுகாப்பு கவசத்தினை அளித்து உங்கள் ரகசிய தகவல்கள் இன்டர்நெட் வழியாக செல்கையில் பாதுகாப்பு அளிக்கிறது. இது தானாகவே இமெயில் செய்தியை என்கிரிப்ட் செய்து வெளியே செல்லும் இமெயில் செய்திகளுக்கு டிஜிட்டல் சிக்னேச்சர் தந்து, சர்டிபிகேட் பரிமாறிக்கொள்ளும் பணியினை எளிதாக்குகிறது. அவுட்லுக், அவுட்லுக் எக்ஸ்பிரஸ், தண்டர்பேர்ட், இன்கிரடி மெயில், விண்டோஸ் லைவ் மெயில், இடோரா மற்றும் POP, SMTP மற்றும் IMAP அடிப்படையில் இயங்கும் இமெயில் கிளையண்ட்களுடன் இணைந்து செயல்படுகிறது. விண்டோஸ் எக்ஸ்பி மற்றும் விஸ்டாவிற்கென தனித்தனியே இந்த புரோகிராம் கிடைக்கிறது.

Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல