திங்கள், 15 மார்ச், 2010

பெண்ணொருவரிடம் காதலை தெரிவிக்க ஒரே சமயத்தில் கூடிய ஆயிரக்கணக்கான இளைஞர்கள்

பல்கலைக்கழக மாணவியொருவரிடம் தமது காதலை தெரிவிக்க பல்லாயிரக்கணக்கான இளை ஞர்கள் ஒரே சமயத்தில் அவரது அறைவாசலில் கூடிய சம்பவம் சீனாவில் இடம்பெற்றுள்ளது.

அண்மையில் ஸாங் மெங்கியன் (Zhang Mengqian) என்ற மேற்படி யுவதி கல்விகற்கும் பல்கலைக்கழகத்தில் இம்மாதம் 7ம் 8ம் திகதிகள் Girls´s day எனும் நாளை கொண்டாடும் முகமாக மாணவிகளிடம் அவரவர் விருப்பங்களை எழுதி அங்குள்ள சுவரில் தொங்கவிடுமாறு கோரி வெற்று அட்டைகள் விநியோகிக்கப்பட்டன.

ஸாங் மெங்கியன், இந்த அட்டையில் குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட நேரத்தில் தனது அறையின் முன்னின்று தனது பெயரைக் கூறி எவராவது நேசத்துடன் அழைப்பதை விரும்புவதாக எழுதியிருந்தார்.

இதனையடுத்தே குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட நேரத்தில் பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் தங்களின் காதலை வெளிப்படுத்துவதற்காக ஸாங் மெங்கியன் அறையின் முன் கூடியிருந்தனர். ஒரு சிலர் துணிவுடன் அவரது பெயரை அழைத்து தமது காதலை பகிரங்கமாக வெளிப்படுத்தினர்.

இப்படி பெருந்திரளான கூட்டத்தை எதிர்பார்க்காத அந்த யுவதி என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்துப்போயுள்ளார்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல