தினமும் ஒட்டப்பயிற்சி செய்பவர்களுக்குப் பாலியல் ஆர்வம் எப்படி இருக்கிறது என்று இங்கிலாந்தச் சேர்ந்த மருத்துவ அறக்கட்டளை ஒன்று தினமும் ஓட்டப்பயிற்சி செய்பவர்கள் ஆயிரம் பேர், ஓட்டப்பயிற்சியில் ஈடுபடாத ஆயிரம் பேரிடம் ஆய்வு நடத்தியது.
அதில் தினமும் ஓட்டப்பயிற்சி செய்பவர்களில் 10-ல் ஒருவர் தினமும் தாம்பத்திய உறவு வைத்து கொள்வதாக கூறியுள்ளனர். 3 சதவீதம் பேர் 2 நாளைக்கு ஒரு தடவை உறவு வைத்து கொள்வதாகவும் கூறியுள்ளனர்.
ஆனால் ஓட்டப்பயிற்சியில் ஈடுபடாதவர்களிடம் கேட்டபோது, 25 சதவீதம் பேர் மாதத்துக்கு ஒரு தடவை மட்டும் தாம்பத்தியத்தில் ஈடுபடுவதாக கூறினர். அதாவது ஓட்டப்பயிற்சி செய்பவர்களை ஒப்பிடும்போது ஓட்டப்பயிற்சி செய்யாதவர்களுக்கு தாம்பத்திய ஆர்வம் மிகவும் குறைவாக இருந்தது தெரிய வந்தது.
ஆகவே, தாம்பத்திய உறவில் ஆர்வம் அதிகரிக்க தினசரி ஓட்டப்பயிற்சியில் ஈடுபடுங்கள்.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக