திங்கள், 15 மார்ச், 2010

அதி வயது கூடிய அமெ. பெண்மணிகள் ஒரே நாளில் காலமானார்கள்

Daisey Bailey ('only' 113)

டெய்ஸி பெய்லி எனும் அமெரிக்க பெண்மணி தனது 113 ஆவது வயதில் கடந்த 07.03.2010 ஞாயிற்றுக்கிழமை காலமானார். இவர் 1896 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 30 ஆம் திகதி பிறந்தவர்.


Mary Josephine Ray (114 years old)

மேரி ஜொசப்பின் எனும் அமெரிக்கப் பெண்மணி தனது 114 ஆவது வயதில் கடந்த 07.03.2010 ஞாயிற்றுக்கிழமை காலமானார். இவர் கனடாவில் 1895ஆம் ஆண்டு மே மாதம் 17 ஆம் திகதி பிறந்தவர்.
1923ஆம் ஆண்டு இவர் வோல்டர் என்பவரை மணந்து கொண்டார். இவரது கணவர் 1967 ஆம் ஆண்டு மரணமானார். இவருக்கு இரண்டு மகன்களும் எட்டுப் பேரப்பிள்ளைகளும, 13 கொள்ளுப் பேரர்களும் உளர்.

Kama Chinen (Japan)
முதலாவது வயது முதிர்ந்த, ஜப்பானைச் சேர்ந்த பெண்மணி, இவரைவிட 7 நாட்களே மூத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.


Neva Morris
அமெரிக்காவின் மற்றுமொரு 114 வயது பெண்மணியான நேவா மொரிஸ் என்பவரும் காலமானார். இவர் 1895 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 3ஆம் திகதி பிறந்தவர்.


Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல