'நாயைக் கண்டால் கல்லைக் காணோம்; கல்லைக் கண்டால் நாயைக் காணோம்' என்று மக்கள் கூறுவதைக் கேட்டிருக்கின்றோம்.
நாய் வரும் போது அதை அடித்து விரட்டுவதற்குக் கல்லைக் காணவில்லை; கல் இருக்கும் போது நாய் வரவில்லை என்று இதற்கு விளக்கம் அளிப்பாரும் உளர்.
இது தவறான விளக்கம். கல்லில் செதுக்கப்பட்டுள்ள நாயின் உருவம் பற்றியது இது. அந்த உருவத்தை நாய் என்று நினைத்துக் கொண்டு பார்த்தால் கல் தோன்றாது. கல் என்று நினைத்துக் கொண்டு பார்த்தால் நாய் தோன்றாது. இதுதான் சரியான விளக்கம்.
திங்கள், 15 மார்ச், 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக