திங்கள், 15 மார்ச், 2010

உணவகத்தில் முத்தமிட்டுக் கொண்ட பிரித்தானிய ஜோடி சட்டத்தின் பிடியில்

துபாயிலுள்ள உணவகமொன்றில் தனது காதலரை முத்த மிட்ட பிரித்தானிய யுவதியொருவர் சிறைத் தண்டனையை எதிர்கொண்டுள்ளார்.
தமது நண்பர்களுடன் இணைந்து உணவகத்தில் உணவருந்திய வேளை சார்லொட் அடம்ஸ் (25 வயது) என்ற மேற்படி யுவதி, அய்மான் நஜாபி (24 வயது) என்ற தனது காதலரை முத்தமிட்டு முஸ்லிம் நாடான துபாயின் ஒழுக்க விதிகளை மீறியுள்ளதாக குற்றஞ்சாட்டப் பட்டுள்ளது.

சுவிஷ் ஜமெய்ராஹ் கடற்கரை உணவகத்தில் மேற்படி ஜோடியின் நடவடிக்கையால் சினமுற்ற 38 வயது உள்ளூர் பெண்மணியொருவர், பொலிஸாருக்கு செய்த முறைப்பாட்டையடுத்தே இந்த ஜோடி கைது செய்யப்பட்டது.

இந்த ஜோடி ஒருவருக்கொருவர் உதட்டில் முத்தமிட்டதை தனது பிள்ளைகள் பார்க்க நேர்ந்ததாக அந்தப் பெண்மணி தெரிவித்துள்ளார்.

எனினும் சார்லொட்டும் அய்மானும் தாம் கன்னத்தில் மட்டுமே முத்தமிட்டுக் கொண்டதாக வாதிட்டுள்ளனர்.

வட இலண்டனிலுள்ள பால் மர்ஸ்கிறீன் என்ற இடத்தைச் சேர்ந்த அய்மான், கடந்த 18 மா தங்களுக்கு மேலாக துபாயிலுள்ள ஹே குழும நிறுவனத்தில் சந்தைப்படுத்தல் ஆலோசகராக பணியாற்றி வருகிறார்.

பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ள சார்லொட்டுக்கும் அய்மானுக்கும் நாட்டை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளதுடன் எதிர்வரும் ஏப்ரல் 4 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல