பொதுவான கருத்து ‘தும்மும்போது இதயத் துடிப்பு ஒரு கணம் நிற்கிறது’
நீங்கள் மூச்சை உள்ளிழுக்கும் போது மார்ப்புப் பகுதி அழுத்தம் அதிகரிக்கிறது. மூச்சை வெளியே விடும்போது அழுத்தம் குறைகிறது. எனவே தும்மும்போது இதயத் துடிப்பு விகிதம் சற்று மாறுமே தவிர, துடிப்பு நிற்காது.
‘தலையில் ஒரு நரைமுடியைப் பிடுங்கினால் அந்த இடத்தில் 10 நரைமுடிகள் வளரும்.
நரை முடியைப் பிடுங்கிய இடத்தில் மீண்டும் ஒரு நரைமுடி வளருமே தவிர, 10 நரைமுடிகள் தோன்றாது.
‘ஈரத் தலையைச் சரியாகத் துடைக்காவிட்டால் ஜலதோஷம் பிடிக்கும்’.
ஜலதோஷ வைரஸால்தான் ஜலதோஷம் பிடிக்கிறதே தவிர, ஈரப்பதத்தால் அல்ல.
‘நெட்டி முறிப்பது விரல் இணைப்புகளில் பாதிப்பை ஏற்படுத்தும்.
’ நெட்டி முறிப்பதால் அபாயம் ஏதுமில்லை. அபூர்வமாக வலி, வீக்கம் போன்றவை ஏற்படலாம்.
‘நாம் நமது மூளையில் 10 சதவீதத்தைத்தான் பயன்படுத்துகிறோம்’
நாம் தூங்கிக் கொண்டிருக்கும் போது கூட 60 சதவீத மூளையை உபயோகப்படுத்துகிறோம்.
‘மீன் சாப்பிடுவது மூளை வளர்ச்சிக்கு நல்லது’
மீன் அதிகமாகச் சாப்பிடுவது மூளைத் திறனை அதிகரிக்காது. ஆனால் கர்ப்பப்பையில் இருக்கும் கருவின் மூளை வளர்ச்சிக்கு மீனில் இருக்கும் ‘ஒமேகா 3’ கொழுப்புகள், குறிப்பாக ‘டி. எச். ஏ’ அத்தியாவசியமானது.
‘அரையிருளில் படிப்பது பார்வைத் திறனைப் பாதிக்கும்.’
மங்கிய விளக்கொளியில் படிப்பது அப்போதைக்குக் கண்ணுக்கு கஷ்டத்தை ஏற்படுத்தலாம். ஆனால் அது நிரந்தரமானதல்ல என்கிறார்கள்.
நிபுணர்கள், ‘நிறைய கரட் சாப்பிட்டால் இருளிலும் பார்க்க முடியும்’
இதில் கொஞ்சம் உண்மை இருக்கிறது. கரட்டில் ‘வைட்டமின் ஏ’ அதிகமாக இருக்கிறது. அது ஒளி உணர் செல்களான ‘குச்சி செல்களுக்கு’ நன்மை பயக்கிறது. இருட்டில் ஓரளவு பார்க்க உதவுகிறது.
‘ஒருவருக்கு ஜலதோஷம் படிக்காமல் விட்டமின் சி தடுக்கும்.’
ரத்த வெள்ளை அணுக்களின் ஆரோக்கியமான செயல்பாட்டுக்கு விட்டமின் சி அவசியம். ஆனால் அது உங்களுக்கு ஜலதோஷம் பிடிக்காமல் தடுக்காது.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக