விஸ்டா மற்றும் விண்டோஸ் சர்வர் 2003 ஒப்பரேட்டிங் சிஸ்டங்களுக்கென 32 பிட் மற்றும் 64 பிட் பதிப்புகள் கிடைக்கின்றன. ஆனால், எக்ஸ்பி தொகுப்பிற்கு 32 பிட் தொகுப்பு மட்டுமே கிடைக்கிறது.
ஏனெனில், ஒரு சிலர் தான் 64 பிட் எக்ஸ்பி பயன்படுத்தி வருகின்றனர்.
டவுண் லோட் செய்யப்படும் பைல் 12 எம்பி என்ற அளவிலேயே உள்ளது. டேப் பிரவுசிங், டேப் வழி பிரவுசிங் என்பது பயர்பாக்ஸ் மற்றும் ஆப்பரா பிரவுசர்களில் இருந்தாலும் மைக்ரோ சாப்ட் இந்த வசதியினை தன் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 7ல் தான் அறி?கப்படுத்தியது. இதனை பதிப்பு 8லும் மைக்ரோ சாப்ட் தக்கவைத்து மேலும் பல புதிய வசதிகளை அறிமுகப்படுத்தி யுள்ளது.
மூடப்பட்ட டேப்களை பட்டிய லிட்டு அவற்றை திறந்திட ஒப்ஷன் தரப்பட்டுள்ளது.
அதன் அடித்தளத் தில் இறுதியாக பிரவுசிங் செய்த தளத்தை திறப்பதற்கும் ஒப்ஷன் தரப் பட்டுள்ளது. பிரவுசரை மொத்தமாக மூடுவதற்கு மேலாக இடதுபுறம் உள்ள பெருக்கல் அடையாளத்தில் கிளிக் செய்திடுகையில் அப்போது பயன்பாட்டில் உள்ள டேப்பினை மூடவும் அல்லது முழு விண்டோவினையும் மூடவும் ஒப்ஷன் கேட்கப்படுகிறது.
கிளிப்போர்டுக்கு டெக்ஸ்ட் ஒன்றை கொப்பி செய்திடுகையில், அதனைப் பயன்படுத்தி வெப் சர்வீஸ் ஒன்றை திறக்கலாம். விண்டோஸ் லைவ் தளத்தில் பிளாக் ஒன்றை அமைக்கலாம். கூகுள் தளத்தில் தேடலாம். இப்படி பல வசதிகளை மேற்கொள்ளலலாம்.
டேப் ஒன்றின் தளத்திற்குள்ளாக இன்னொரு டேப் திறக்கப்படுகையில், அது முந்தைய டேப்பிற்கு அருகாமையில் திறக்கப்படுகிறது.
இரண்டிற்கும் ஒரே வண்ணம் தரப்படுகிறது. இதனால், தொடர்புள்ள தளங்களை எளிதாக அறிய முடிகிறது. ஒரு டேப்பினை மூடியபின் அதனுடன் தொடர்புள்ள இன்னொரு டேப் இருந்தால் அதுதான் முன்னுக்கு வருகிறது.
பதிப்பு 8ன் அட்ரஸ் பார் முன் னேற்றம் கண்டுள்ளது. பயர்பாக்ஸ் மற்றும் குரோம்பிரவுசர்களில் இரு ப்பதுபோல் அட்ரஸ் பாரிலும் தேடல் வேலையை மேற்கொள்ளலாம்.
இங்கு தேடப்பட வேண்டிய டெக்ஸ்டை டைப் செய்து என்டர் தட்டினால் இன்டர்நெட் எங்கும் தேடப்பட்டு விடைகள் தரப்படும்.
அதே போல் அட்ரஸ் பாரில் இணையதள முகவரிகள் டைப் செய்திடுகையில் இந்த தளமா? அல்லது இந்த தளமா என நமக்கு காட்டப்படுகிறது. இவை Suggested Site என அழைக்கப்படுகின்றன.
ஏற்கனவே பார்த்த தளங்கள் கொண்ட ஹிஸ்டரி மற்றும் நீங்கள் அமைத்த பேவரிட் தளப்பட்டிய லைச் சார்ந்து இவை தரப்படுகி ன்றன. இவ்வாறு ஐந்து தளங்கள் காட்டப்படுகின்றன. டைப் செய்திடு கையிலேயே ஷிப்ட்+ என்டர் தட்டினால் முதலில் காட்டப்படும் தளத்திற்கு நீங்கள் அழைத்து செல் லப்படுவீர்கள். இன்டர்நெட் எக்ஸ்பு ரோளரர் காட்டும் தளம் ஒன்றினை வேண்டாம் என எண்ணினால், அதன் சிவப்பு பெருக்கல் அடையாளத்தில் மவுஸால் கிளிக் செய்தால் அது காட்டப்படமாட்டாது.
இதில், தரப்பட்டுள்ள Find Dialogue Boxஇல் டைப் செய்திடுகையில், அதற்கான ?டிவுகள் காட்டப்படுகின்றன. இந்த வசதி பயர்பாக்ஸ் பிரவுசரிடமிருந்து மைக்ரோசாப்ட் எடுத்துள்ளது.
பதிப்பு 8ல் அக்ஸிலரேட்டர் தரப்பட்டுள்ளது. வழக்கமான வேகத்தைக் காட்டிலும் கூடுதல் வேகத்தில் தகவல்களை இணையத்திலிருந்து பெற்றுத் தருவது அக்ஸிலரேட்டரின் வேலை.
இந்த இணைய சேவையை பல தளங்கள் தந்து வருகின்றன.
இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 8ல் இது இணைக்கப்பட்டுள்ளது.
அக்ஸிலரேட்டரின் செயல்கள் என்ன? என்பதனை இங்கு பார்த்தால் நிச்சயம் மைக்ரோசாப்டை நாம் பாராட்டுவோம். ஒரு டெக்ஸ்ட்டை ஹைலைட் செய்தால் இதனை காணலாம். ஹைலைட் செய்தவுடன் கீழாக ஒரு அம்புக்குறி ஊதா வண்ணத்தில் காட்டப்படுவதனைக் காணலாம்.
இதில் கிளிக் செய்தால் பல ஒப்ஷன்கள் இங்கு காட்டப்படும்.
ஹைலைட் செய்த டெக்ஸ்ட்டைக் கொண்டு என்ன செய்யலாம் என்று நமக்கு பட்டியல் தரப்படுகிறது.
Search, email, Translate, Blog, Map என இந்த பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. இது முன்பு யாஹு மெசஞ்சர் வைத்திருந்தது.
நம் பணியை எளிதாக்க இப்போது மைக்ரோசாப்ட் இதனை தருகிறது.
அடுத்த வசதி வெப் ஸ்லைசஸ் என்பது. இவற்றை பயன்படுத்தி இணையத்தளங்களின் தகவல்களை அப்டேட் செய்திடலாம். ஆனால், அதற்கு அந்த இணையதளங்கள் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 8க்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டிருக்க வேண்டும். இந்த வசதிற்கேற்ப தளங்கள் இனி மாற்றப்படுவதனைக் காணலாம்.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக