Leonardo Da Vinci
4006 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 21 ஆம் திகதி பிரபஞ்ச ரீதியில் ஏற்படும் பாரிய வெள்ளப்பெருக்கில் உலகிலுள்ள உயிரினங்கள் அனைத்தும் அழிவடையும் என லியனர்டோ டாவின்ஸி எதிர்வு கூறியுள்ளதாக சப்றினா சபோர்ஸா கலிட்ஸியா என்ற மேற்படி ஆராய்ச்சியாளர் தெரிவித்தார்.
இதன் பிரகாரம் 4006 ஆம் ஆண்டு நவம்பர் முதலாம் திகதியானது புதிய மனிதத் தோற்றத்திற்கான ஆரம்பம் என்பதில் லியோனார்டோ டாவின்ஸி நம்பிக்கை கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
லியனர்டோ டாவின்ஸியால் வரையப் பட்ட இயேசு கிறிஸ்துவின் இறுதி இராப் போசனத்தை சித்திரிக்கும் ஓவியத்தின் மேலிருந்த அவரது கையெழுத்துகளை ஆராய்ந்தே மேற்படி தகவலை சப்றினா சபோர்ஸா கலிட்ஸியா வெளியிட்டுள்ளார்.
அமெரிக்க லொஸ் ஏஞ்சல்ஸிலுள்ள கலி போர்னியா பல்கலைக்கழகத்தில் ஆய்வாளராக பணியாற்றுகையில் லியனர்டோ டாவின்ஸியின் கையெழுத்துகளை ஆராய்ச்சி செய்த சப்றினா, தற்போது வத்திக்கானின் வரலாறு ஆவணப் பிரிவில் கடமையாற்றுகிறார்.
லியனர்டோ டாவின்ஸியின் சங்கேத குறியீடுகளை விவரிக்கும் நூலொன்றை எழுதி வெளியிடுவதில் பங்கேற்ற சப்றினா, ஒரு நாளிலுள்ள 24 மணி நேரத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் லியனர்டோ டாவின்ஸி 24 லத்தீன் எழுத்துகளைப் பயன்படுத்தியுள்ளதாக கூறினார்.
ஓவியராகவும் விஞ்ஞானியுமாக திகழ்ந்த லியனர்டோ டாவின்ஸி, கருத்துக்களை வெளியிட சுதந்திரமில்லாத காலகட்டத்தில் வாழ்ந்ததால் சங்கேத குறியீடுகளில் தனது செய்திகளை மறைமுகமாக குறிப்பிட்டு வந்ததாக சப்றினா தெரிவித்தார்.
இயேசு கிறிஸ்துவின் இறுதி இராப்போசன ஓவியத்தை 1495 ஆம் ஆண்டில் வரைய ஆரம்பித்த லியனர்டோ டாவின்ஸி, 1498 ஆம் ஆண்டு அதனை பூர்த்தி செய்துள்ளார்.
மிகவும் மோசமாக சிதைவடைந்த நிலையில் காணப்பட்ட இந்த ஓவியம், 1978 ஆம் ஆண்டுக்கும் 1999 ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலப் பகுதியில் மீள புதுப்பிக்கப்பட்டது.




கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக