பொருளாதார சீர்குலைவின் பாதிப்பிலிருந்து இன்னும் மீளாததால் கொரியாவில் வேலையில்லா திண்டாட்டம் தீவிரமாக உள்ளது .எனவே எந்த வேலைக்கும் அங்கு போட்டி நிலவுகின்றது.
இதன் விளைவாக துப்புறவு பணியாளர்களுக்கான காலி இடங்களை நிரப்ப போட்டி வைத்து அதன் மூலம் தொழிலாலர்களை தெரிவு செய்துள்ளனர். இத்தொழிலுக்கு ஏராளமானோர் விண்ணப்பித்து இருந்தனர்.
வேலைக்கு விண்ணப்பித்தவர்களின் முதுகில் 20 கிலோஅரிசி மூட்டையை தூக்கிக்கொண்டு 100 மீட்டர் ஓடுவது உட்பட பல்வேறு விதமானபோட்டி நடத்தப்பட்டுள்ளது.
இந்த போட்டியில் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆர்வத்தோடு கலந்து கொண்டனராம். நகரம் முழுவதும் பெருக்கி சுத்தம் செய்ய தேவையான உடல் பலம் உள்ளதா என்று பரிசோதித்து பார்க்கவே இந்த போட்டி என அதிகாரிகள் தெரிவித்தனர்.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக