வியாழன், 18 மார்ச், 2010

இல்வாழ்வில் இணைய காத்திருப்போருக்கு சவாலாகும் செவ்வாய்தோஷம்

ஒரு பெண்ணின் சாதகத்தில் இலக்கினத்திலிருந்து எண்ணி வரும் ஏழாமிடமாகிய களத்திரஸ் தானத்தை வைத்தே அவளின் திருமணம் நிச்சயம் செய்யப்படுகிறது. அச்சாதகத்தில் எட்டாமிடம் மாங்கல்ய ஸ்தானத்தையும் இரண்டாமிடம் குடும்ப ஸ்தானத்தையும் குறிப்பதாகும். சாதகங்களில் இல்வாழ்க்கையைக் குறிக்கும் களத்திரகாரகனாக சுக்கிரன் குறிக்கப்படுகிறான்.

ஒரு பெண் அவள் எப்படிப்பட்ட அழகியாயிருந்தாலும் சரி, எத்தகைய உயர் பதவியில் அமர்ந்திருந்தாலும் சரி அவளது பிறந்த சாதகத்தில் சுக்கிரன் சனியுடன் சேர்க்கை பெற்றோ அன்றேல் பார்வை பெற்றோ இருந்தால் அவளுக்குத் தாமதமாகத்தான் திருமணம் நடைபெறுகிறது.

அது போல களத்திரஸ்தானமாகிய ஏழாமிடத்தை சனி நோக்கினாலும் திருமணம் தாமதமாகவே நடைபெறுகிறது. இவ்விதம் சனி நோக்குவதைவிடப் பிரச்சினை சனி ஏழாமிடத்தில் இருப்பதால் வருகிறது. அதாவது இன, மத, குலபேதம் கடந்து ஓர் அந்நியர் மேல் காதல் ஏற்பட்டு கல்யாணம் நடக்கிறது. சுருங்கச் சொன்னால் தீய கிரகங்களில் தன்மையானதான சனி, இலக்கினம் எனப்படும் முதலாம் வீட்டிலோ அல்லது ஐந்தாமிடம் எனப்படும் திரிகோணத்திலோ அல்லது பத்தாமிடம் எனப்படும் கேந்திர வீட்டிலோ அமையப் பெற்றிருந்தாலும் காலங் கடந்துதான் திருமணப் பாக்கியம் கை கூடுகிறது.

அதிலும் ஏழாமிடத்தில் செவ்வாய் எனும் தீக்கோள் அமர்ந்திருந்து மற்றொரு தீக்கோளான சனி யால் ஏழாம் பார்வையால் நேரடியாகவோ அல்லது கொள்ளிப் பார்வையெனப்படும் மூன்றாம் பார்வையாலோ பார்க்கப்பட்டால், எவ்வளவுதான் முயற்சி யெடுத்தாலும் திருமணமென்பது முயற்கொம்பாகவே இருக்கிறது.

மேலும் ஏழாமிடத்தில் வக்கிரம் (Retrograde) பெற்ற கிரகங்கள் இடம்பெற்றிருந்தாலும் அல்லது வக்கிரம் பெற்ற கிரகங்கள் ஏழாம் வீட்டைப் பார்வை செய்தாலும் தாமதமாகத்தான் திருமணம் நடைபெறுகிறது. வக்கிரம் என்றால் ஒரு கிரகம் தான் வழக்கமாக முன்னோக்கி நகருகிற நிலையிலிருந்து பின்னோக்கி நகருதல்.

சூரியன் சந்திரன் தவிர மற்றக் கிரகங்கள் எல்லா வற்றிற்கும் இந்த வக்கிரகதியுண்டு. குடும்பத்தா னம் எனப்படும் இரண்டாம் வீட்டுக்குரிய கிரகம் இவ்விதம் வக்கிரம் பெற்று 12 இல் மறையப் பெற்று தீய கிரகங்களின் சேர்க்கையோ பார்வையோ பெற்றால் என்னதான் முயன்றாலும 30 வயதுக்கு மேல் தான் திருமணம் நடைபெறுகிறது. ஏழாமிடத்தில் ராகு இருந்தாலும் அல்லது சனி வீற்றிருந்தாலும் மண வாழ்வு அமைய மிகுந்த காலதாமதமாகிறது. செவ்வாய் இராகுவு டன் இணைந்து ஏழாமிடத்தில் அமையப் பெற்றால் அது கடுமையான தோஷத்தைக் கொடுக்கும். அந்த ஏழாமிடம் செவ்வாய்க்கு ஆட்சி வீடாகவோ உச்சம் பெறும் வீடாகவோ இல்லாமலிருந்தால் இந்தத் தோஷத்தின் அளவு அதிகப்படும். அத்துடன் அத்தகைய அமைப்பைத் தன் சாதகத்தில் கொண்ட பெண் பாலுறவில் எளிதில் திருப்தியடைய முடியாத ஒருவளாயிருப்பாளாம்.

களத்திரகாரகன் களத்தில் வீட்டில் அமர்ந்திருப்பதைத் தோஷமென சோதிட நூல்கள் கூறுகின்றன. களத்திரகாரகன் சுக்கிரன் களத்திரஸ்தானமாகிய ஏழாமிடத்தில் தீய கிரகங்களின் சேர்க்கை பெற்றிருந்தால் திருமணப் பாக்கியத்தை சுமார் 40 வயது வரை தாமதப்படுத்துவார். அதுபோல் ஏழாமிடம் துலாமாக அமைந்து அதில் உச்சம் பெற்றிருக்கும் சனி, திருமணத்தை மிகவும் தாமதப்படுத்துவார். இத்தகைய கிரக அமைப்பினைக் கொண்ட பலர் 50 வயது கடந்தும் தனிமரமாக நின்றிருப்பதை நான் பார்த்திருக்கிறேன். சிலர் தம்மை விட பல வயதுகள் மூத்த ஆணுக்கோ பெண்ணுக்கோ வாழ்க்கைப் படுகின்றனர். நீண்ட நாள் தனிமையில் விரக்தியடைந்து நெறி பிறழ்ந்து நடக்கும் நிலைக்கு அக்கிரக அமைப்பு சிலரை ஆளாக்கியும் உள்ளது.

இந்த அமைப்புக் காரணமாக நிச்சயிக்கப்பட்ட சில கல்யாணங்கள் கூட மணமேடையில் வைத்து குலைந்து போகும் வாய்ப்புண்டு. களத்திரஸ்தானாதிபதி அட்டமத்தில் மறையப் பெற்றோ அல்லது அட்டமாதிபதியின் சாரத்தில் மறையப் பெற்றோ இருக்கக் காணப்பட்டால் மண வாழ்க்கையானது எட்டாக் கனியாகவே இருக்கும்.

எந்த ராசியில் இருப்பினும் இராகுவினதும் அதற்கு ஏழாமிடத்தில் சஞ்சரிக்கும் கேதுவின தும் பிடிக்குள் இதர கிரகங்கள் அடைபடுவதை கால சர்ப்பயோகம் என்பர். இந்த யோகத்தை தன் சாதகத்தை கொண்டுள்ள பெண்ணுக்கும் மிக வும் காலம் கடந்தே திருமணம் நடைபெறுகிறது.
இந்த அசுபயோகம் சாதகத்திலுள்ள பெண்ணை எழுதில் அடையாளம் காணலாம். நெடுகிலும் கோயில் குளமென்று திரிவாள். காப்புக் கட்டுதல், உபவாசம் என்று வருடம் முழுக்க விரதமிருந்து உடலை வருத்துவாள். அவள் தேகம் ஒட்டியுலர்ந்து எதிர்பாலாரை ஈர்க்கக் கூடிய அங்கப் பொலிவுகள் குறைந்து காணப்படும்.

இனி செவ்வாய் தோஷம் எவ்விதம் திருமணத்தடையை ஏற்படுத்துகிறது என்பதையும் சாதகப் பொருத்தம் சரியாக அமையாத விடத்து அது எப்படி ஓர் ஆண் அல்லது ஒரு பெண்ணினது தாம்பத்திய வாழ்வைக் குலைத்து வைதவ்யக் கோலம் கொள்ள வைக்கிறது என்பதையும் பார்ப்போம்.

திருமணம் என்னும் போது ஒருவரது சாதகத்தில் செவ்வாயின் நிலையை அவதானித்து, அது தோஷமற்றது எனக் கண்ட பின்னரே இதர நிலைகளை ஆராய்ந்து பொருத்தம் காண்பர். ஆணிலோ, பெண்ணிலோ செவ்வாய், தோஷமான இடங்களில் நிற்பதாகத் தெரிந்தால் அதற்கு இணையான தோஷள்ள ஆணினதோ, பெண்ணினதோ சாதகத்தைத் தான் தேர்ந்தெடுப்பர். அதை விடுத்து சுயலா பத்திற்காக சொத்து, சுகம், சாதி, அந்தஸ்துக்காக தோசமுள்ள சாதகத்துடன் செவ்வாய் தோஷமற்ற மற்றொரு சாதகத்தை பொருத்தி கல்யாணம் நடந்தால் சொற்ப காலத்தில் இறப்பு, இழப்பு என்ற விபதங்கள் நடைபெறுகின்றன.

திருமணம் தடையாகி வாட்டும் ஒரு செவ்வாய் தோஷப் பெண்ணுக்கு கிரக சாந்தி செய்தல், வாழை மரத்திற்குக் கட்டி வைத்து தோஷம் கழித்தல் போன்ற சடங்குகளை தங்கள் மனத்திருப்திக்காக நடத்தி விட்டு பின்னர் நடைபெற்ற எத்தனையோ செவ்வாய் தோஷக்காரர்களின் கல்யாணங்கள் நாளடைவில் பால் பொங்கி வருகையிலே பானை உடைவது போல பாதியிலே பாழாய்ப் போனதெல்லாம் எனக்கு கண்கண்ட அனுபவங்கள்.

திருமணம் ஆயிரங்காலத்துப் பயிர்; ஒருவனுக்கு ஒருத்தி என்ற எங்கள் சக கலாசாரம், பண்பாடு, ஒழுக்கம் என்ற விழுமியங்கள் சிதைவுறாது காக்கப்பட வேண்டுமானால் ஆண்டாண்டு கால ஆய்வுகளின் பின்னே எமது ஆன்றோர்கள் கணித்து, அனுபவத்திலும் கண்டறிந்து வெளிப்படுத்திய சோதிட வண்மைகளை நாம் பின்பற்ற வேண்டியது அவசியம்.

தோஷள்ள ஒரு சாதகிக்கு அவ்வாறே தோஷள்ள ஒரு சாதகனின் சாதகமே பொருத்தமானது. இராசிச் சக்கரத்தில் இல்லாவிடினும் நவாம்ச சக்கரத்திலாவது சாதகத்திற்குச் சாதகம் தோஷம் சமமாக இருக்க வேண்டும். செவ்வாய் தோஷத்திற்குள்ள சிறப்பு யாதெனில் அத்தோஷமுள்ள பெண்ணானவள் அதிக அழகைக் கொண்டிருப்பாள். பார்க்கும் எந்த ஆணும் ஆசைப்படும் வண்ணம் உருண்டு திரண்டு பொலிந்த அங்கப் பொலிவுகளைக் கொண்டிருப்பாள். இத்தனை இலாவணியங்களுக்கு மத்தியில் எந்த ஆணும் எளிதில் அவளை அணுகி விடாதபடியான ஓர் ஆண்மையின் கம்பீரம் அவளது தோற்றத்தில் மிளிரும்.

ஆனால் தோஷமென்ற பெயரில் அத்தனை சௌந்தயங்களும் காட்டிலெறித்த நிலாப் போல பயனற்றுப் போவதையோ விட்டில்களை எரிக்க அழகாகச் சுடர்விடும் தங்கக் குத்து விளக்குப் போல மோகம், ஆசை மற்றும் காதலின் பெயரால் தனக்கு வாழ்க்கைத் துணையாக வந்து வாய்க்கும் எந்த ஆணையும் அவளது தோஷத்தின் கடுமை பலியெடுக்காமல் இருப்பதையோ தடுக்க வேண்டுமானால் அவளது தோஷத்திற்குத் தோஷம் சமமாக்கப்பட வேண்டும். அதாவது சமமான தோஷள்ள ஒரு மணவாளனே அவளுக்கு வாழ்க்கைப்பட வேண்டும். இந்தச் செவ்வாய் தோஷத்தின் கடுமையின் பிரகாரம் அதனை வசைப்படுத்தினால் அது 7 இல் செவ் வாய் 8 இல் செவ்வாய், 2இல் செவ்வாய், 4 இல் செவ்வாய், 12 இல் செவ்வாய், இலக்கினச் செவ்வாய் என்று வரும். இவைகளை விட சந்திர னுக்கு 7 இல் செவ்வாய், சுக்கிரனுக்கு 7 இல் என்பனவும் தோஷமாகக் கருதப்படுவதாக மந் திரேசுவரர் என்ற சோதிட மேதை "பலதீபிகை' என்ற தமது ஜோதிடக் கிரந்தத்தில் குறிப்பிட்டுள்ளார்.

செவ்வாய்க்கு மூன்று பார்வைகளுண்டு. முதலாவது தானிருக்கும் இடத்திலிருந்து 4 ஆவது இராசியை பூரணமாக நோக்குதல். அவ்விதமானால் அது இலக்கினத்திலிருந்து ஏழாமிடமான களத்திரஸ்தானமாக இருக்கும். அடுத்தது 7 ஆம் இடமான களத்திரத்தானத்தை நோக்குதல். அப்ப டியாயின் அதன் இருப்பிடம் உதய லக்கினமாக இருக்கும். மூன்றாவதாக 8 ஆம் வீடாகிய மாங் கல்ய ஸ்தானத்தை நோக்குதல். அப்போது அதன் இருப்பிடம் இலக்கினத்துக்கு இரண்டாம் வீடாகிய குடும்பத்தானமாக அமையும்.

இலக்கினத்திலிருக்கும் செவ்வாய் களத்திர வீட்டை நேரடியாகவும் மாங்கல்ய வீட்டை தீவிர மாகவும் நோக்குவதால் அவ்விதம் சாதகத்தில் அமைந்த பெண்ணுக்கோ, ஆணுக்கோ தனது வாழ்க்கைத் துணையை இழக்க வேண்டியேற்ப டும். இரண்டாம் வீடாகிய குடும்பத்தானத்திலி ருந்து செவ்வாய் மாங்கல்ய வீட்டை நேரடியாக திருஷ்டி செய்வதால் அவ்விதம் அமைந்த ஆண் பெண்களுக்கு தோஷத்திற்குத் தோஷம் சமனாக் கப்படாத நிலையில் துணையை எவ்விதமோ பிரிய வேண்டிய நிலை ஏற்படும்.

சுகஸ்தானமாகிய 4 ஆம் இடத்துச் செவ்வாய் நாலாம் பார்வையாக 7 ஆம் வீட்டை பூரணமாக நோக்குவதால் தார நஷ்டம் ஏற்படுகிறது. எட்டா மிடத்துச் செவ்வாய், மாங்கல்ய ஸ்தானத்திலிருந்து குடும்ப ஸ்தானத்தை (2 ஆம் வீடு) நேரடியாக நோக் கினால் குடும்ப நாசம் பண்ணி விடும். 12 ஆம் வீடு விரய வீடு. செலவு வீடு. சாவைச் சொல்லும் வீடு. இங்கிருக்கும் செவ் வாய் களத்திர வீட்டை தீவிர மாக நோக்குவதால் அத்த கைய பேருக்கு தாரத்திற்குக் கொள்ளி வைக்கும் நிலை யேற்படுகிறது.

சோதிடத்தில் சூரியன் உயிராகவும் சந்திரன் உடலாகவும் கொள்ளப்படுகின்றனர். சந்திரனாகிய உடலை செவ்வாய் ஏழாமிடத்தில் நின்று சமநோக்காய் நோக்கும் போது அது இரு கிரகங்களுக்கும் ஆட்சி, உச்சம், ஒருவர்க்கொருவர் பரிவர்த்தனம் போன்ற நிலைகள் இல்லையென்றால், அதுவும் இவைகள் ஒன்றையொன்று திருஷ்டிக்கும் நிலையில் தோஷமாகி குடும்ப வாழ்வைப் பாதிக்கிறது. அது போன்றதொரு தோஷந்தான் கல்யாணகாரகனான சுக்கிரனுக்கு ஏழில் செவ்வாய் சஞ்சப்பதாலும் வருகிறது.

ஒரு சாதகத்தில் செவ்வாயும் சுக்கிரனும் சேர்ந்திருப்பதோ ஒருவருக்கொருவர் சமநோக்கில் சஞ் சரிப்பதோ தோஷம். குடும்ப வாழ்க்கைக்கு இது உதவாது. இச்சேர்க்கையிலும் சம நோக்கிலும் ஒழுக்கக் குறைபாடு அதிகமாகச் சுட்டிக் காட்டப் படுகிறது. அதுபோன்றது ஒன்றுதான் செவ் வாய்க்குச் சுக்கிரன் ஏழாமிடத்தில் சஞ்சரிப்பதும்.

இதனாலும் குடும்பத்தில் தார நஷ்டமோ, பிவினையோ ஏற்படுவதாக பலதீபிகை சொல்கிறது. அதேசமயம் பெண்ணின் சாதகத்திலுள்ள செவ்வாய்க்கு ஆணின் சாதகத்திலுள்ள சுக்கிரன் ஒரு கேந்திரமோ, கோணமோ பெற்று அமர்ந்தி ருக்கக் காணப்பட்டால் அந்த ஆண், பெண் இணைப்பில் பாலுறவில் திருப்திகண்டு நெடு நாள் ஒன்றி வாழும் தன்மையை அது குறிக்குமாம். அதனாற்றான் மணப் பொருத்தங்களில் இவ்வித அமைப்பு ஊன்றிக் கவனிக்கப்படுகி றது.

இவ்விதம் உள்ளிருந்தே உருவழிக்கும் கொடியதான செவ்வாய் தோஷத்தை பல்வேறு கூறுகளாக தத்தம் சாதகங்களில் கொண்டுள்ள அன்பர்களுக்கு ஆசுவாசமளிக்கக் கூடிய செய்தி யொன்றும் சோதிடத்தில் உள்ளது.

அதாவது இலக்கினமாகவோ இரண்டாம் வீடாகிய குடுபம்பத்தானமாகவோ 4 ஆம் வீடாகிய சுகஸ்தானமாகவோ, 7 ஆம் வீடாகிய களத்திரஸ்தானமாகவோ, 8 ஆம் வீடாகிய மாங்கல்ய ஸ்தானமாகவோ, அன்றேல் விரயஸ்தானமாகிய 12 ஆம் வீடாகவோ அமைந்து செவ்வாயின் சொந்த வீடுகளான மேடமோ, விருச்சிகமோ அல்லது செவ்வாயின் உச்ச வீடான மகரமோ மேற்சொன்ன வீடுகளில் ஒன்றாக வந்து, அதில் செவ்வாய் இருந்தால் அது தோஷமாக கணிக்கப்பட மாட்டாது.

ஏனென்றால் அவை செவ்வாய்க்கு ஆதிபத்தியமான வீடுகள் என்பதால் அதில் சஞ்சக்கும் செவ்வாய் தீமை செய்யாதென்பது சோதிட விதி.

அதுபோல மேற்சொன்ன மேடம், விருச்சிக ம் மகரம் 2, 4, 7, 8, 12 ஆகிய வீடுகளில் ஒன்றாக அமைந்து, அது செவ்வாயால் பார்க்கப் பட்டாலும் தோஷம் கிடையாது. என்னதான் கொடூரமாக உலவினாலும் தத்தம் சொந்த வீடுகளுக்கு எந்தக் கிரகம் தீமை செய்வதில்லை.

திருவோணம்
Image Hosted by ImageShack.us

1 கருத்து:

  1. திருவோணம் அவர்கள் வீரகேசரியில் எழுதிய இக்கட்டுரை என்னிடம் உள்ளது. அவரின் கட்டுரைகளை இணையத்தில் பல மாதங்களாகத் தேடியபோது இவ் வலையமைப்பைக் கண்டேன்.மகிழ்ச்சி:நன்றி.

    10,12 வருடங்கட்கு முன்னர் இவர் வீரகேசரியில் எழுதிய ரஜனி அரசியலுக்கு வர சாதகத்தில் அமைப்பு இல்லை என்று எழுதியது உண்மையாகியுள்ளது.பெறுமதியான அக் கட்டுரையை தற்போது நீங்கள் வெளியிட்டால் நல்லது.

    மேலும் உங்களுடன்,‍ வலையத்துடன் மூலம் தொடர்பு கொள்ள விபரம் தரவும்.

    நன்றி.

    பதிலளிநீக்கு

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல