வியாழன், 18 மார்ச், 2010

82 ஆவது ஒஸ்கார் விருது விழா

உலக சினிமாவில் உயரிய விருதான ஒஸ்கார் விருது வழங்கும் விழா லொஸ்ஏஞ்சல்ஸ் நகரில் கண்கவர் கொண்டாட்டங்களுடன் நடந்தது. உலகின் அனைத்து சினிமா ரசிகர்களும் கலைஞர்களும் நிகழ்ச்சியை காண வந்திருந்தினர். ஒரு திருவிழாபோல் நடைபெற்ற நிகழ்ச்சியில் " அவதார்' படத்திற்கும் தி ஹர்ட்லாக்கர்' படத்திற்கும் அதிக போட்டி நிலவியது.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஜேம்ஸ் கேமரூனின் அவதார் படத்துக்கு மூன்று விருதுகள் மட்டுமே கிடைத்தன. ஆனால் கேமரூனின் முன்னாள் மனைவி கேதன் பிக்லோ இயக்கிய, தோல்விப் படம் என்று அறிவிக்கப்பட்ட தி ஹர்ட் லாக்கருக்கு சிறந்த படம், சிறந்த இயக்கம் உள்ளிட்ட 6 விருதுகள் கிடைத்துள்ளன.
Kathryn-Bigelow

சிறந்த படம், சிறந்த இயக்கம், சிறந்த எடிட்டிங், சிறந்த சவுண்ட் எடிட்டிங், சிறந்த சவுண்ட் மிக் ஸிங், சிறந்த ஒஜினல் ஸ்கிரீன்பிளே ஆகிய 6 பிரிவுகளில் இந்த விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.
அவதார் திரைப்படம் சிறந்த படம், சிறந்த இயக்கம் உள்ளிட்ட 9 பிரிவுகளில் பரிந்துரைக்கப் பட்டிருந்தது.

சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த கலை இயக்கம் மற்றும் விஷூவல் எபெக்ட்ஸுக்கான விருதுகள் மட்டுமே அவதாருக்கே கிடைத்தன.

சிறந்த நடிகருக்கான விருது க்ரேஸ் ஹார்ட் படத்தின் நாயகன் ஜெப் பிட்ஜஸுக்குக் கிடைத்தது.
sandra bullock

சிறந்த நடிகைக்கான விருது தி ப்ளைண்ட் சைட் பட நாயகி சான்ட்ரா புல்லக்குக்கு வழங்கப்பட்டது.
Mo'Nique

சிறந்த துணை நடிகைக்கான விருது நோ நிக்கிக்கும், சிறந்த துணை நடிகருக்கான விருது கிறிஸ்டோபர் வால்ட்ஸுக்கும் வழங்கப்பட்டது.

சிறந்த இயக்கம் மற்றும் சிறந்த படத்துக்கான விருதுகள் அவதாருக்கே கிடைக்கும் என்று கூறப்பட்டு வந்த நிலையில், அவை தி ஹர்ட் லாக்கருக்கு கிடைத்தது பார்வையாளர்களை அதிர வைத்தது. ஜேம்ஸ் கேமரூன் முகத்தில் அந்த ஏமாற்றம் அப்பட்டமாகத் தெரிந்தது!
jeff bridges

2009ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள் விவரம்:

சிறந்த நடிகர்: ஜெப் பிட்ஜஸ், படம்: க்ரேஸி ஹார்ட்

சிறந்த நடிகை: சான்ட்ரா புல்லக், படம்: தி ப்ளைண்ட் சைட்

சிறந்த படம்: தி ஹர்ட் லாக்கர்

சிறந்த இயக்கம்: கேதன் பிக்லோ, படம்: தி ஹர்ட் லாக்கர்

சிறந்த துணை நடிகர்: கிறிஸ்டோபர் வால்ட்ஸ். படம்: இன்குளோயஸ் பாஸ்டர்ட்ஸ்

சிறந்த துணை நடிகை: மோ நிக்கி, படம்: பிஸியர்

சிறந்த அனிமேஷன் படம்: அப்

சிறந்த கலை இயக்கம்: ரிக் கார்ட்ர், ராபர்ட் ஸ்ட்ராம்பர்க் (கலை இயக்கம்), கிம் சின்க்ளேர் (செட் அலங்காரம்), படம்: அவதார்

சிறந்த ஒளிப்பதிவு: மோரோ பியரோ, படம்: அவதார்

சிறந்த விஷூவல் எபெக்ட்ஸ்: ஜோ லெட்ட, ஸ்டீபன் ரோஸன்பாம், ரிச்சர்ட் பென்ஹேம் மற்றும் ஆண்ட்ரூ ஆர் ஜோன்ஸ், படம்: அவதார்

சிறந்த டிசைனிங்: சாண்டி பாவல், படம்: தி யங் விக்டோரியா

சிறந்த டாகுமெண்டரி படம்: தி கோவ் (லூயி ஸியோஸ் மற்றும் பிஷர் ஸ்டீவன்ஸ்)

சிறந்த டாகுமெண்டரி (குறும்படம்): மியூசிக் பை ப்ரூடென்ஸ் (ரோஜர் ரோஸ் வில் லியம்ஸ் மற்றும் எலினார் பர்கெட்)

சிறந்த எடிட்டிங்: பாப் ராவ்ஸ்கி கிறிஸ் இன்னிஸ், படம்: தி ஹர்ட் லாக்கர்

சிறந்த வெளிநாட்டு மொழிப் படம்: தி ஸீக்ரெட் இன் தேர் ஐஸ் (El Secreto de Sus Ojos), அர்ஜன்டைனா, இயக்கம்: ஜான் ஜோஸ் காம்பெனல்லா

சிறந்த மேக்கப்: பார்னி பர்மன், மின்டி ஹால் மற்றும் ஜோயல் ஹர்லோ

சிறந்த இசை:மைக்கேல் ஜியாசினோ, படம்: அப்

சிறந்த இசை (ஒரிஜினல் ஸ்கோர்): இசை பாடல்: ரையன் பிங்காம் மற்றும் டி போன் பர்னட், படம்: க்ரேஸி ஹார்ட்

சிறந்த சவுண்ட் எடிட்டிங்: பால் என்ஜோ ஒட்டோசன், படம்: தி ஹர்ட் லாக்கர்
Christoph Waltz

சிறந்த சவுண்ட் மிக்ஸிங்: பால் என்ஜோ ஒட்டோசன் ரே பெக்கட், படம்: தி ஹர் லாக்கர்

சிறந்த ஒரிஜினல் ஸ்க்ரிப்ட்: மார்க் பால், படம்: தி ஹர்ட் லாக்கர்

சிறந்த குறும்படம்: தி நியூ டெனன்ட்ஸ், இயக்கியவர்: ஜோக்கிம் பேக் டிவி மேக்னஸ் ஸன்

சிறந்தஅனிமேஷன் குறும்படம்: லோக ரோமா, இயக்கம்: நிகோலஸ் ஷ்மெர்கின்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல