வியாழன், 18 மார்ச், 2010

இசை உரிமையை பயன்படுத்தி மோசடி: இளையராஜா

சென்னை, மார்ச்18: இசை உரிமையைப் பயன்படுத்தியதில் மோசடி செய்ததாக ஒரு இசைத்தட்டு நிறுவனம் மீது இசையமைப்பாளர் இளையராஜா, சென்னை மாநகரப் போலீஸ் கமிஷனர் டி. ராஜேந்திரனிடம் வியாழக்கிழமை புகார் அளித்தார்.


இது குறித்து நிருபர்களிடம் இளையராஜா கூறியது:

நான் இசையமைத்த தமிழ், தெலுங்கு திரைப்படங்களின் இசை ஒலி நாடாக்களையும், டிஜிட்டல் இசைத் தட்டுகளையும் வெளியிடும் உரிமையை தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்களுடன் கலந்தாலோசித்து இசைத் தட்டு நிறுவனம் ஒன்றிடம் வழங்கினோம்.


இந்த நிறுவனம் கடந்த 30 ஆண்டுகளாக இசை வெளியீடுகள் மூலம் கிடைத்த வருவாயில் இசையமைப்பாளருக்கும், தயாரிப்பாளர்களுக்கும் அளிக்க வேண்டிய உரிமைத் தொகையை அளிக்கவில்லை.


மேலும், நான் இசையமைத்த தெலுங்கு படங்களின் இசை உரிமையை வேறொரு நிறுவனத்துக்கு அந் நிறுவனத்தினர் விதிகளுக்குப் புறம்பாக விற்றுள்ளனர்.


இத்துடன் அல்லாமல், இசை உரிமையை நியூயார்க், லண்டன் நகரங்களில் செயல்படும் ஒரு நிறுவனத்துக்கும் விற்றுள்ளனர்.


இதற்கும் மேலாக, தன்னிடம் உள்ள இந்த இசை உரிமைகள் அனைத்தையும் வேறு ஒரு நிறுவனத்துக்கு ரூ. 25 கோடிக்கு அந்த நிறுவனம் விற்கப்போவதாக தெரியவந்துள்ளது.


எனவே, இசையமைப்பாளர், தயாரிப்பாளர்கள் ஆகியோரை ஏமாற்றி பல கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்டுள்ள அந்த நிறுவனம் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநகரப் போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்துள்ளேன் என்றார் இளையராஜா.


கமிஷனர் உத்தரவு: இளையராஜா அளித்துள்ள புகார் குறித்து விசாரிக்குமாறு, மத்திய குற்றப் பிரிவு போலீஸôருக்கு கமிஷனர் டி. ராஜேந்திரன் உத்தரவிட்டார்.

Dinamani
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல