வியாழன், 18 மார்ச், 2010

அவசரகால நிலைமையின் கீழ் தரையிறங்கிய விமானத்தால் மோதுண்டு நபர் மரணம்

அவசர கால நிலைமையின் கீழ் தரையிறங்கிய சிறிய ரக விமானமொன்றால் மோதுண்டு நபரொருவர் பரிதாபகரமாக உயிரிழந்த சம்பவம் தென் கரோலினாவிலுள்ள ஹில்டன் ஹெட் கடற்கரையில் இடம்பெற்றுள்ளது.


13, 000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த வேளை மேற் படி “லான்கெயார்' (Lancair) ரக விமானத்தில் எண்ணெய் கசிவு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஓர்லண்டோ விலிருந்து வேர்ஜினியா மாநிலத்தை நோக்கிச் சென்ற மேற்படி விமானத்தை ஹில்டன் ஹெட் விமான நிலையத்தில் இறக்க விமானி முயற்சித்துள்ளார். எனினும் அவரது முயற்சி தோல்வியில் முடிந்து விமானம் கடற்கரையில் தரையிறக் கப்பட்டுள்ளது. இதன் போது கடற்கரையில் ஓட்டப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த இரண்டு குழந்தைகளுக்குத் தந்தையான ரொபேர்ட் கரி ஜோன்ஸ் (Robert Gary Jones, 38) விமானத்தில் மோதி உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை தேசிய போக்குவரத்து பாதுகாப்புச்சபை மற்றும் அரச விமான நிர்வாக அமைப்பு என்பனவற்றைச் சேர்ந்த அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல