Kathryn Bigelow
82 வருட ஒஸ்கார் சரித்திரத்தில் முதல் முறையாக சிறந்த பெண் இயக்குநராக தி ஹர்ட் லொக்கர் படம் மூலமாக கெதன் பிக்லோ தெரிவாகி விருது வழங்கப்பட்டுள்ளார்.சிறந்த இயக்கம் மற்றும் சிறந்த படத்துக்கான விருதுகள் அவதாருக்கே கிடைக்கும் என்று எல்லோருமே எதிர்பார்த்தார்கள் ஜேம்ஸ் கெமரூன் முகத்தில் அந்த ஏமாற்றம் அப்பட்டமாகத் தெரிந்தது.
James Cameron
ஜேம்ஸ் கெமரூன் இயக்கி 6 வருடங்களுக்கு முன் வெளிவந்து 11 ஒஸ்கார் விருதுகளைப் பெற்றது டைட் டானிக். டைட்டானிக்கின் வசூலை அவதார் திரைப்படம் மிஞ்சியதாம். ஆனால் வசூலில் மிகக் குறைந்த தி ஹர்ட் லொக்கர் திரைப்படம் 6 விருதுகளைப் பெற்று ஆச்சர்யத்தில் ஆழ்த்திவிட்டதாம்.
காத்ன் பிக்லோ இயக்கியிருக்கும் தி ஹர்ட் லொக்கர் படம் யுத்தம் என்பது வெறிபிடித்த ஒன்று. மனிதனை உன்மத்தம் பிடித்தவனாக அது மாற்றுகிறது என்பதைச் சொல்கிறது.
ஈராக்கில் யுத்தப் பகுதிகளில்(அநேகமாக எல்லாமே அப்படித்தான்) உள்ள புதைத்து வைக்கப்பட்ட அல்லது மறைத்து வைக்கப் பட்டிருக்கும் அதி பயங்கரமான குண்டுகளைக் கண்டுபிடித்து அகற்றுவது ராணுவத்தின் உருபிவின் (EOD) வேலை.
அதில் பிரதானமாக மூன்று ஆபீசர்கள்.
கிட்டத்தட்ட இருபது நாட்களில் அவர்கள் சந்திக்கும் அனுபவங்களும். அதனால் அவர்களுக்கு ஏற்படுகின்ற மனநல பாதிப்புகளுந்தான் படம். மூவரில் ஒருவனான வில்லியம் ஜேம்ஸ் (சிறந்த நடிகர் ஆஸ்காருக்காகப் பரிந்துரை செய்யப்பட்டிருக்கும் ஜெர்மி ரென்னர்) குண்டுகளைக் கண்டுபிடித்து செயலிழக்கச் செய்வதில் நிபுணன் என்றாலும் யுத்தம் ஏற்படுத்திய பாதிப்புக்கள் அவனை ஏடாகூடமாக செயற்படும் வீரனாகவே மாற்றுகிறது. உயர் அதிகாரிகளை அவன் மதிக்கமாட்டான். அவர்களின் எச்சரிக்கைகளையும் மீறி பயங்கர ரிஸ்க் எடுத்து குண்டுகளைச் செயலிழக்க வைப்பான்.
அவனுக்குத் தெரிந்த ஒரு சிறுவனைக் கொன்று அவன் வயிற்றில் குண்டு களை மறைத்து வைத்தி ருக்கிறார்கள். வயிற்றைக் கிழித்து அந்த குண்டுகளை அவன் செயலிழக்க வைக்கும் போது அவன் மனம் தடுமாறுகிறது. அது என்னடா வாழ்க்கை? ஏன் இந்தச் சிறுவன் இறந்தான்? என்று அரற்றுகிறான். ஓர் அப்பாவியை இரும்புக் கம்பிகளால் கட்டி அவன் உடம்பு ழுவதும் பயங்கர குண்டுகளைத் தொங்கவிட்டு குண்டு வெடிக்க நேரத்தையும் செட் செய்துவிட்டு ராணுவ காம் நோக்கி அனுப்புகிறார்கள் திவிரவாதிகள்.
குண்டு வெடிக்க இன்னும் இரண்டு நிமிடங்களே இருக்கும் நிலையில் இராணுவ உயர் அதிகாரி ஜேம்ஸிடம் இது தேராத கேஸ் எல்லோரும் ஓடிப்போய்த் தப்பிப்போம் என்கிறான். அவன் கட்டளையை ஏற்காத ஜேம்ஸ் இரண்டு நிமிடங்கள் ஒரு மனிதனைக் காப்பாற்ற போதும் என்று சொல்லிவிட்டு அவன் அருகே செல்கிறான்.
குண்டுகளை செயலிழக்க வைக்க என்னென்னவோ செய்து பார்க்கிறான். வினாடிகள் ஓடுகின்றன இன்னும் சில வினாடிகளே மிச்சம்.
இனி ஒன்றும் செய்ய முடியாது என்று ஜேம்ஸூக்கு தெரிந்துவிடுகிறது. மன்னியுங்கள் இனி என்னால் ஏதும் செய்ய இயலாது. என்று வருத்ததுடன் சொல்லி விட்டுத் திரும்பி தலை தெறிக்க ஓடுகிறான். எல்லோரும் பதுங்குகிறார்கள் அந்த அப்பாவி மனிதன் அல்லாஹூ அக்பர் என்று கலங்கியபடி மண்டியிட்டு கண்களை மூட பயங்கர குண்டுகள் வெடித்து அவன் சிதறும் காட்சி படம் பார்ப்பவர்களை அதிர வைக்கிறது.
இந்த அனுபவங்களால் ஜேம்ஸும் சக அதிகாரியும் பாதிக்கப்படுகிறார்கள் இங்கு நடப்பது எல்லாமே அபத்தமாக குரூரமாக இருக்கிறது. இங்கேயிருந்து நான் போக விரும்புகிறேன். என் குடும்பத்துடன் இணைந்து ஒரு மகனைப் பெற்று அமைதியாக வாழ விரும்புகிறேன். என்று புலம்புகிறான் அதிகாரி.
ஜேம்ஸ் அமெரிக்காவுக்கு வீடு வந்து சேருகிறான்.
ஒரு சாதாரண சிவிலியனாக முயல்கிறான். சில நாட்களிலேயே அவனுக்கு மீண்டும் அழைப்பு வருகிறது. தன் கைக்குழந்தையை முத்தமிட்டு குண்டுகளை செயலிழக்க வைக்கும் வேலையை நான் விரும்புகிறேன் மகனே மறுபடி நான் ஈராக் செல்கிறேன். என்று சொல்லிவட்டு மனமில்லாமல் கிளம்புகிறான்.
ஈராக் ஆப்கானிஸ்தானில் பணிபுரியும் அமெரிக்க வீரர்கள் பெரும்பாலானவர்களின் மனநிலை வில்லியம் ஜேம்ஸினுடையதைப் போல்தான் என்பதை உதாரணமாகக் காட்டுகிறார் இயக்குநர் காத்ன் பிக்லோ எதற்காக இந்த யுத்தம்? யாருக்கு அதில் இலாபம்? யாரை யார் எதற்குக் கொல்கிறார்கள்? என்று புரியாத நிலையிலேயே அவர்கள் கொல்கிறார்கள் அல்லது கொல்லப்படுகிறார்கள்.
படத்தின் ஆரம்பத்தில் ஒரு வரியைக் காட்டுகிறார்கள் யுத்தத்தின் வேகம் என்பது உயிரை மாய்க்கும் போதையைப் போன்றது. அதனால் யுத்தம் என்பதே ஒரு போதைப் பொருள்தான்.
(war is drug) ஈராக் ஆப்கானிஸ்தானை அடுத்து ஈரான் மீது யுத்தப் பார்வையைத் திருப்பியிருக்கும்.




கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக