கவனமாயிருங்கள்
முகத்தில் போஸ்டர்
ஒட்டுவார்கள்
முதுகில்
கொடி கட்டுவார்கள்
பரிதாபமாய்ப்
பார்ப்பார்கள்
பாசம் காட்டுவார்கள்
பணம் தருவார்கள்
படுக்கையிலும்
போடுவார்கள்
வீடு தேடி வருவார்கள்
விரும்பியதைக்
கேளுங்களென்பார்கள்
தேர்தல் முடிந்ததும்
தருவோமென்பார்கள்
வாக்களித்து முடிந்ததும்
தலை மறைவாய்
போய் விடுவார்கள்
பல வயிறுகள்
பசியால் வாடியிருக்கும்
பணத்தை இறைத்து
சுவர்களை
போஸ்டர்களை
அழகுபடுத்துவார்கள்
ஒரு சிலர் ஓயிலால்
நாசம் படுத்துவார்கள்
தேர்தல் முடிந்து விடும்
பக்கத்து வீட்டுக் காரனின்
பகையும் பட்டகாயம்
நிரந்தரமாய் போகும்
தேர்தல் வருது
கவனமாயிருங்கள்
மருதமுனை பி.எம்.எம்.ஏ. காதர்


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக