உடலுறவின்போது இந்த இரண்டு அல்லது மூன்று கருமுட்டைகள் வெளியே வந்து அவற்றுடன் இரண்டு மூன்று விந்தணுக்கள் கலந்தால் இரட்டைக் குழந்தைகளோ மூன்று குழந்தைகளோ பிறக்கின்றன.
அப்படி இரட்டைக் குழந்தையாக பிறந்தவர்களில் விசித்திரமான இருவர் ஸியாம் இரட்டையர்கள்தான் (Siamese Twins). இவர்கள் சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன் ஒரே நாளில் காலமான சாங் (Chang), எங் (Eng) என்ற ஸியாம் நாட்டு (தற்போதைய தாய்லாந்து நாடுதான் முன்னைய ஸியாம் ஆகும்) இரட்டையர்கள், மார்பு பகுதி ஒட்டியபடியே பிறந்தவர்கள்.
1811ஆம் ஆண்டு மே மாதம் 11ந் திகதி மருத்துவ உலகிற்கே சவால் விடுவதுபோல ஒட்டிப் பிறந்த இந்த இரட்டையர்களை அவர்கள் உயிருக்கே ஆபத்து நேரலாம் என்று பயந்து அறுவை சிகிச்சை மூலம் பிரிக்கவில்லை.
இவர்கள் உலகெங்கும் பயணம் செய்து, தங்களுடைய விசித்திர குறைபாட்டைக் காண்பித்து, பல வித்தைகளும் செய்துகாட்டி ஏராளமாக பணம் சம்பாதிக்கத் தொடங்கினார்கள்.
கர்ப்பிணிகள் மற்றும் உறுதியற்ற மனம் படைத்தவர்கள் பயப்படுவார்கள் என்று காரணம் காட்டி பிரான்ஸ் அரசு இவர்களைத் தன் நாட்டிற்குள் அனுமதிக்க மறுத்து விட்டது. ஒட்டி பிறந்துவிட்டதால் ஒருவருடைய விருப்பத்திற்கு அடுத்தவர் ஒத்துப் போவது என்பது இயலாத காரியமாக இருந்தது. சாங் நீச்சலுக்குப் போக வேண்டும் என்று நினைத்தால், விருப்பம் இல்லா விட்டாலும் எங்கும் கூடவே போக வேண்டுமல்லவா? அதனால் இவர்களுக்குள் விரோதம் வரத்தான் செய்தது. அவர்கள் இருவரும் ஒருவருக்கொரவர் பேசிக்கொள்ளாமலேயே இருந்தார்கள்.
இருவரும் 1843 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் திருமணம் செய்துகொண்டார்கள். சாங் அடிலாய்ட் (Adelaide Yates) என்ற பெண்ணை மணக்க, எங் அவளுடைய சகோதரி சாராவை (Sarah Anne Yates) மணந்தார். இருவருக்கும் குழந்தைகளும் பிறந்தன. (சாங்கிற்கு 10 பிள்ளைகள் எங்கிற்கு 11 பிள்ளைகள்).
அறுபத்து மூன்று ஆண்டுகால வாழ்க்கைக்குப் பின் இருவரும் ஒரே நாளில் இறந்தனர். 1874 ஆம் ஆண்டு சாங் என்பவர் நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டு படுத்திருந்தபடியே உறக்கத்தில் இறந்துவிட்டார். மார்பில் ஒட்டிக் கொண்டிருந்த பிணத்துடன் எங் எப்படி வாழ்வார். இருப்பினும் மருத்துவரை வருவித்து உடனடியாக இவர்களை ஒப்பரேசன் மூலம் பிரித்தெடுக்க விவாதித்தனர். ஆனால் ஏனோ தெரியவில்லை, எங் ஒப்ப்ரேசனுக்கு சம்மதிக்கவில்லை. மன உளைச்சல், பயத்திலேயே இருந்த எங் அவர் அடுத்த மூன்று மணி நேரத்திற்குள் உயிர் நீத்தார்.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக