வியாழன், 18 மார்ச், 2010

புதிய சேர்ச் இஞ்சின்

சேர்ச் இஞ்ஜின்களில் கூகிள் மிக உயரத்தில், அதிக எண்ணிக்கையில் வாடிக்கையாளர்களுடன் இருந்தாலும், கூகுள், யாஹூ மற்றும் பிங் ஆகிய மூன்றுமே அதிகமாகத் தேடலில் பயன்படுத்தப்படுகின்றன.

ஆனால், இவையனைத்திலும் எது சிறந்தது? எது அதிக பயன் தருவது என்று கேள்வி கேட்டால் அதற்கான சரியான பதிலைத் தருவது சிரமம்.

ஆனால், இன்னொரு சேர்ச் இஞ்ஜின் உள்ளது. அது இந்த மூன்று சேர்ச் இஞ்ஜின்களிலும் தேடி, தேடலுக்கான விடைகளை மொத்தமாகச் சேர்த்துத் தருகிறது.

அதன் பெயர் பிளைண்ட் சேர்ச்.

இதில் ஒன்றைத் தேடக் கொடுத்தால் மூன்று பிரிவுகளாகத் தேடி, ஒரே திரையில், அடுத்தடுத்து வரிசையாக முடிவுகளைத் தருகிறது.

எத்தனை விநாடிகளில் இந்த முடிவுகள் கிடைத்தன என்ற தகவல் மேலாகத் தரப்படுகிறது. ஆனால், எந்த முடிவு, எந்த சேர்ச் இஞ்ஜினிலிருந்து பெறப்பட்டது என்று முதலில் காட்டப்படுவதில்லை. நாம் ஏதேனும் ஒரு முடிவில் கர்சரைக் கொண்டு சென்று அழுத்தியவுடன் மூன்று சேர்ச் இஞ்சினும், அவற்றின் பெயருடன் காட்டப்படுகின்றன. எது விரைவாக தேடித்தந்தது என அப்போது அறியலாம். நல்ல வேடிக்கையான, ஆனால் பயனுள்ள தேடலாகும்.

இந்த வகைத் தேடலை மேற்கொள்ள நீங்கள் செல்ல வேண்டிய இணைய தள முகவரி:

http://www.blindsearch.fejus.com/
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல