வியாழன், 18 மார்ச், 2010

ஒரு பாப்பரசரை தெரிவு செய்வதெப்படி?

பாப்பரசர் ஒருவர் மரணித்தால் இரு வாரங்களில் புதிய ஒரு பாப்பரசரைத் தெரிவு செய்ய வேண்டும் என்பதே வழமையில் உள்ள விதிமுறை. இறந்தவருக்காக 9 நாட்கள் துக்க அனுஷ்டானமும் இடம்பெறுவதுண்டு.

ஒரு பாப்பரசர் இறந்ததும் உடனடியாக சகல அதிகாரங்களும் வததிக்கானின்
இராஜாங்க அமைச்சரிடம் சென்று விடுகின்றன. இவரை Camerlengo என்றே அழைக்கின்றார்கள். பாப்பரசர் இறந்ததும் இவர் செய்ய வேண்டிய சடங்குகள் சில இருக்கின்றன.

இறந்த பாப்பரசரின் பிறப்புப் பெயரைச் சொல்லி இவர் மூன்று தடவைகள் அழைப்பார். அதற்குப் பதில் வராதபோது பாப்பரசருக்குரிய சின்னங்கள் அழிக்கப்படும். வேறு யாருமே உபயோகிக்காத வகையில் இந்தப் பாப்பரசரின் பாவனையில் இருந்த பிரத்தியேக இலச்சினையும் அழிக்கப்படும் கையில் அணிந்துள்ள மீனவனின் மோதிரம் என்று அழைக்கப்படும் மோதிரமும் அழிக்கப்படும். சென்ட் பீட்டர்ஸ் தேவாலயததின் வெண்கலக் கதவுகளும் இழுத்து மூடப்படும்.

மரணச் சடங்கு ஏற்பாடுகளைக் கவனிக்கும் பணி இவரிடம் விடப்படுகின்றது. அடுத்த பாப்ரசரைத் தெரிவு செய்யும் பொறுப்பும் இவர் தலையிலேயே விழுந்து விடுகின்றது.
ஒரு பாப்பரசர் இறந்ததும் அவரின் கீழ் பணியாற்றிய அனைத்து வத்திகான் அதிகாரிகளும் தமது பதவிகளை இழந்து விடுவது இங்கு கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டிய விடயமாகின்றது.

117 கார்டினல்கள் புதிய பாப்பரசரைத் தெரிவு செய்யும் தகுதியைப் பெற்றுள்ளார்கள். வத்திக்கானில் இடம்பெறும் இரகசிய தேர்தலில் பதிய பாப்பரசரை இங்கு தெரிவு செய்வார்கள். வெளியார் யாருமே வாக்கெடுப்பு நடக்கும் பகுதியில் அனுமதிக்கப்பட மாட்டார்கள்;. கதவுகள் சாரளங்கள் எல்லாமே பூட்டப்பட்டு விடும். யாருக்கு மூன்றில் இரண்டு மடங்கு ஆதரவு கிடைக்கின்றதோ அவரே புதிய பாப்பரசராக நியமனம் பெறுவார். முதல் வாக்கெடுபபில் இப்படி ஆதரவு கிடைக்காவிட்டால் அது தொடரும். இப்படி 30 தடவைகள் தொடர்ந்தால் 31 வது தடைவ பாதித் தொகைக்கு ஒன்று அதிகமாக யார் பெறுகிறாரோ அவரே புதிய ஆன்மீகத் தலைவராகின்றார்.

புதிய பாப்பரசர் தெரிவாகி விட்டால் வத்திக்கானிலிருந்து வெண்மையான புகை வெளியேறும். வெளியே காத்திருக்கும் பார்வையாளர்கள் தகவலை அறிந்து ஆர்ப்பரிப்பார்கள். தெரிவாகாவிடின் கரும்புகை வெளியேற்றப்படும்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல