வியாழன், 18 மார்ச், 2010

நித்யானந்தனுடன் தொடர்பில்லை - மறுக்கும் ரோஹினி

நித்யானந்தனுக்கும் தனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று நடிகை ரோஹினி விளக்கம் தெரிவித்துள்ளார்.

நித்யானந்தனுடன் தொடர்புடைய நடிகைகள் என்று நடிகைகள் ராக சுதா, ரோஹினி ஆகியோ்ர் நெருக்கமான தொடர்பு கொண்டிருந்ததாக செய்திகள் வந்துள்ளன. ராகசுதாதான் ரஞ்சிதாவை ஆசிரமத்துக்கு அழைத்துப் போனாராம். நித்யானந்தனின் பிரதான சிஷ்யைகளில் ராகசுதாவும் ஒருவராம். எனவே இதுவரை வாய் திறக்காமல் உள்ளார் ராகசுதா.

ஆனால் நடிகை ரோஹினி, இப்போது நித்யானந்தன் குறித்து பேச ஆரம்பித்துள்ளார்.

அவர் கூறுகையில், "என்னை நித்யானந்தா சாமியாருடன் இணைத்து பேசுவது வருத்தம் அளிக்கிறது. அவரை சந்தித்தது இல்லை. ஆன்மீக சொற்பொழிவு கூட்டங்களுக்கும் போனது இல்லை.

என்னை நித்யானந்தா கூட்டத்தில் பார்த்ததாக ஒரு நடிகர் கூறி இருக்கிறார். இது உண்மைக்கு மாறானது. நான் அந்த கூட்டத்துக்கு போகவில்லை. இதுபோன்ற விழாகளில் எனக்கு நம்பிக்கை கிடையாது. என்னை அவருடன் சம்பந்தப்படுத்தி வந்த வதந்திகளால் வருத்தமடைந்துள்ளேன்..."
என்றார்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல