புதன், 10 நவம்பர், 2010

3 வயது குழந்தைக்கு பாலியல் தொந்தரவு

ராமநாதபுரம் மாவட்டத்தில் 3 வயது குழந்தையை பாலியல் தொந்தரவு செய்த நபரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

இந்த கொடூரச் சம்பவம் முள்வாடி கிராமத்தில் இன்று நடைபெற்றுள்ளது.

தனது வீட்டுக்கு அருகே விளையாடிக் கொண்டிருந்த குழந்தையை அருகே வசிக்கும் வி. தங்கபாண்டி (23) என்பவர் தன் வீட்டுக்கு தூக்கிச் சென்றுள்ளார். பின்னர் அக்குழந்தையை அவர் பாலியல் தொந்தரவு செய்துள்ளார். குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு பக்கத்து வீட்டுக்காரர்கள் ஓடிவந்து அக்குழந்தையை காப்பாற்றினர்.

இதையடுத்து, போலீஸார் தங்கபாண்டியை கைது செய்தனர். சம்பவம் குறித்து கேள்விப்பட்ட ஏர்வாடி டி.எஸ்.பி. சங்கு நேரில் வந்து விசாரணை நடத்தினார்.

கோவையில் பள்ளிக் குழந்தைகளை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற சம்பவத்தில் குற்றவாளி ஒருவர் நேற்று போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்நிலையில், குழந்தையை பாலியல் தொந்தரவு செய்துள்ள சம்பவம் முள்வாடி கிராமத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல