மிக்சிகன் மாநிலத்தை சேர்ந்த ஜெனிபர் கிலைன் (28) என்ற பெண், தோல் புற்று நோயால் பாதிக்கப்பட்டார். அதனால் அவர் மருத்துவமனையில் செய்த வேலை பறிபோனது. வேலை இல்லாத காரணத்தால் எனது குடும்பம் பல்வேறு இன்னல்களை சந்திக்கிறது.
எனவே தனக்கு உதவி புரிய வேண்டும் என்று ஜெனிபர் அதிபர் ஒபாமாவுக்கு கடிதம் எழுதினார். பின்னர் ஜெனிபருக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் வெள்ளை மாளிகையில் இருந்து பதில் கடிதம் வந்தது. அந்த கடிதம் தற்போது $7,000 க்கு ஏலம் போனது. அதை பிரபலமானவர்களின் கையெழுத்துகளை சேகரிக்கும் ஒருவர் வாங்கினார்.
அப்பணத்தில் $3,000 டொலரை, மருத்துவ செலவிற்காக பட்ட கடன்களை அழிக்க உள்ளதாகவும், மிகுதி $4,000 டொலரை தனது வீட்டின் பெயரில் உள்ள கடனை தீர்ப்பதற்கு பயன்படுத்தப்போவதாக ஜெனிபர் கிலைன் தெரிவித்தார்.





கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக