புதன், 10 நவம்பர், 2010

யாழ்ப்பாணத்தில் ரயில் நிலையங்களில் காத்திருந்த சிங்கள குடியேற்றவாசிகளில் ஒரு தொகுதியினர் நேற்றிரவு நாவற்குழியில் குடியமர்த்தப்பட்டுள்ளனர்!

யாழ்ப்பாணத்தை தமது பூர்வீக இடம் எனக் கூறி ரயில் நிலையங்களில் காத்திருந்த சிங்கள குடியேற்றவாசிகளில் ஒரு தொகுதியினர் நேற்றிரவு நாவற்குழியில் குடியமர்த்தப்பட்டுள்ளதாக முதற்கட்டத்தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும் அங்கு பிரவேசிப்பதற்கு உள்ளுர் ஊடகவியலாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. நாவற்குழியிலுள்ள வீடமைப்புத்திட்டப் பகுதியில் உள்ள தென்னந்தோப்புக் காணிகள் இவர்களுக்காக பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

குறிப்பிட்டுச் சொல்லக் கூடியதான விளைநிலமாக இந்தப் பகுதி உள்ளது. இப்பகுதியில் ஏற்கனவே பூர்வீகமாக வாழ்ந்து வருகின்ற மக்களுக்கென அரச காணியான இவை வீடமைப்புத் திட்டத்திற்கென பகிர்ந்தளிக்கப்பட்டிருந்தன. அந்தப் பகுதியில் எஞ்சியிருந்த காணிகளிலேயே 32 குடும்பங்கள் முதற்கட்டமாக குடியேற்றப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

எனினும் இந்தத் தகவல்களை உறுதிப்படுத்துவதற்கு அரச அதிகாரிகள் எவரும் தயாராக இருக்கவில்லை. இந்த நிலையில் குடியேற்றப்படவர்களுக்கு படையினரதும் காவற்துறையினரும் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல