கடந்த 2 மாதங்களில் சுமார் 20 முறை அமெரிக்கா சென்று திரும்பியிருக்கிறார் ரகுமான். இவ்வாறு செல்லும்போது அங்குள்ள ஹோட்டல்களிலேயே தங்கி வந்தார். இந்நிலையில் அமெரிக்காவில் சொந்தமாக வீடு இருந்தால் வசதியாக இருக்கும் என்று ஏ.ஆர்.ரகுமான் கருதினார்.
இதையடுத்து அவரது நண்பர்கள் மூலம் வீடு பார்க்கும் படலம் தீவிரமாக நடந்தது. தற்போது அமெரிக்காவில் முக்கிய நகரங்களில் ஒன்றான லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் சொகுசு அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றை ரகுமான் வாங்கியுள்ளார்.
இதன் மதிப்பு பல கோடிகளாகும். உலகின் சொகுசு நகரங்கள் பட்டியலில் லாஸ் ஏஞ்சல்ஸ் முன்னணி இடத்தில் உள்ளது. இதனைக் கருத்தில் கொண்டே அங்கு தனது வீட்டை ரகுமான் அமைத்துள்ளார். இந்த வீட்டிலேயே சிறிய ஸ்டூடியோ ஒன்றையும் அவர் உருவாக்கியுள்ளார். இதன் மூலம் அங்கேயே இசையமைப்பு பணிகளை மேற்கொள்ள முடியும்.
ரகுமானின் சென்னை வீட்டிலும் இதேபோன்று ஸ்டூடியோ உள்ளது. ஹாலிவுட் படங்களுக்கு இசை அமைப்பதால் இதைவிட நவீனமாக அமெரிக்க வீட்டின் ஸ்டூடியோவை ரகுமான் அமைத்துள்ளார்.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக