புதன், 10 நவம்பர், 2010

வயோதிபர்களை பராமரிக்க ரோபோக்கள்

வயோதிபர்களை பராமரிக்கவும் அவர்களுடன் நட்புறவுடன் பழகவும் கூடிய ரோபோக்களை உருவாக்குவதில் பிரித்தானிய பிஸ்டல் ஆய்வு கூடத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் வெற்றி பெற்றுள்ளனர்.

பிரித்தானியாவில் வயோதிபர்கள் தொகை அதிகரித்து வருவதால் அவர்களை கவனிப்பது பெரும் பிரச்சினையாக மாறியுள்ள நிலையில் அதற்கு தீர்வு அளிப்பதாக தமது கண்டுபிடிப்பு உள்ளதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். கடந்த 25 வருட காலப் பகுதியில் பிரித்தானியாவில் 84 வயதுக்கு மேற்பட்டவர்க ளின் தொகை இருமடங்காக அதிகரித் துள்ளது. இந்நிலையில் இந்த முதியோர் பராமரிப்பு ரோபோக்களை உருவாக்கும் பணி பிறிஸ்டல் பல்கலைக்கழகம் மற்றும் மேற்கு இங்கிலாந்து பல்கலைக்கழகம் என்பவற்றைச் சேர்ந்த விஞ்ஞானிகளால் முன்னெடுக் கப்பட்டுள்ளது.

இந்த ரோபோக்கள் வயோதிபர்கள், தமது வீடுகளில் சுதந்திரமாக வாழ்வதற்கு உதவும் என தெரிவிக்கப்ப டுகிறது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் 3.5 மில்லியன் ஸ்ரேலிங் பவுண் நிதியுதவியுடன் 7 வெவ்வேறு நாடுகளில் கூட்டிணைப்பில் இந்த ரோபோக்களை உருவாக்கும் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல