புதன், 10 நவம்பர், 2010

மனித தோலிலிருந்து குருதியை தயாரிக்கும் வழிமுறை கண்டுபிடிப்பு

மனித தோலை குருதியாக மாற்றும் புரட்சிகரமான வழிமுறையை கனடிய மூலவுயிர்க்கல ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்துள்ளனர்.
இந்த வழிறையானது புற்றுநோய் மற்றும் ஏனைய நோய்களுக்காக சிகிச்சையளிப்பதில் முக்கிய திருப்புனையாக அமையும் என தெரிவிக்கப்படுகிறது.

மனித தோலிலுள்ள கல தொகுதியொன்றை மனித மூலவுயிர்க் கலங்களைப் பயன் படுத்தாமல் குருதியாக மாற்றுவதை இந்த வழி முறை நோக்காகக் கொண்டுள்ளது.

மனித மூலவுயிர்க் கலங்களைப் பயன்படுத்தி குருதியை உருவாக்கும் செயற்கிரமத்தை விட, தோல் கலங்களிலிருந்து குருதியை உருவாக்குவது இலகுவான செயற்கிரமம் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

இந்த ஆய்வானது கனடிய மக்மாஸ்டர்ஸ் மூலவுயிர்க்கல மற்றும் புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சி யாளரான மருத்துவ கலாநிதி மைக் பாதியா தலைமையிலான குழுவினரால் மேற் கொள்ளப்பட்டது. மைக் பாதியா இந்திய வம்சாவளி இனத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒருவன் சொந்தத் தோலை குருதியாக மாற்றும் இந்த செயற்கிரமம் அறுவைச் சிகிச்சையின் போது தேவைப்படும் குருதி யை நோயாளி தன்னிடமிருந்தே பெற்றுக் கொள்வதை சாத்தியமாக்கும் என கூறப்ப டுகிறது.

ஒருவன் சொந்த தோலிலிருந்து தயாரிக்கப்பட்ட குருதி என்பதால் அக்குருதி அவரது உடலுக்கு மிகவும் ஒத்திசைவானதாக அமையும் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

வயது வந்த மனிதர் ஒருவன் தோலிலிருந்து பெறப்படும் 4 சென்மீற்றர் நீளம் 3 சென்மீற்றர் அகலடைய பகுதியைப் பயன்படுத்தி போதுமான குருதியை தயாரிக்க புதிய இந்த கண்டுபிடிப்பு வழிவகை செய்வதாக மைக் பாதியா கூறினார்.
இந்த தோலிலிருந்து குருதியை தயாக் கும் செயற்கிரமம் தொடர்பான மருத்துவ பசோதனைகள் 2012 ஆம் ஆண்டுக்குள் ஆரம்பிக்கப்படும் என்று கூறிய மைக் பாதியா, இந்த தொழில்நுட்பமõனது பொதுமக்களை சென்றடைய 5 தல் 10 வருடங்கள் வரை செல்லலõம் என்று தெவித்தார்.

கனடிய புற்றுநோய் சக ஆராய்ச்சி நிறுவகம் மற்றும் கனடிய சுகாதார ஆராய்ச்சி நிறுவகம் என்பவற்றின் நிதியுதவியுடன் இந்த ஆய்வு முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல