புதன், 10 நவம்பர், 2010

பிணைக்கைதியாக இருக்கும் எல்லைக்காந்தியின் பேரனை கொலை செய்வோம்

எல்லைக்காந்தியின் பேரன் பாகிஸ்தான் தலீபான் தீவிரவாதிகளால் பிணைக்கைதியாக பிடிக்கப்பட்டு இருக்கிறார். அவரை கொலை செய்வோம் என்று தீவிரவாதிகள் பாகிஸ்தான் அரசுக்கு மிரட்டல் விடுத்து இருக்கிறார்கள்.
எல்லைக்காந்தி

பல்கலைக்கழக துணைவேந்தர்

விடுதலைக்கு முன்பு பாகிஸ்தான் இந்தியாவின் ஒரு அங்கமாக இருந்தபோது, புஷ்டு இனத்தலைவரான அப்துல்கபூர் கான் வெள்ளையர் ஆட்சிக்கு எதிராக போராட்டம் நடத்தினார். அவர் காந்தியின் நெருங்கிய நண்பர் ஆவார். அவர் எல்லைக்காந்தி என்று அழைக்கப்பட்டார். இவர் இப்போது உயிருடன் இல்லை.

அவரது அண்ணன் கான் சாகிப் வடமேற்கு எல்லைப்புற மாநில முதல்-மந்திரியாக இருந்தார். 1947-ம் ஆண்டு அவர் பாகிஸ்தான் தேசியக்கொடிக்கு மரியாதை செலுத்த மறுத்துவிட்டதால் டிஸ்மிஸ் செய்யப்பட்டார். அவரது பேரன் தான் அஜ்மல்கான். இவர் பெஷாவரில் உள்ள இஸ்லாமியா பல்கலைக்கழக துணைவேந்தராக இருக்கிறார்.

கடத்தப்பட்டார்

இவரை பாகிஸ்தான் தலீபான் தீவிரவாதிகள் கடந்த செப்டம்பர் மாதம் 7-ந்தேதி கடத்தி சென்று விட்டனர். அவர் தீவிரவாதிகளிடம் பிணைக்கைதியாக இருக்கிறார்.

பாகிஸ்தான் ராணுவம் கடந்த ஆண்டு நவம்பர் 20-ந்தேதி அன்று தலீபான்களுக்கு எதிராக நடத்திய நடவடிக்கையில் தலீபான் உயர்மட்ட தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களை விடுவிக்க வேண்டும் என்றும் இல்லாவிட்டால் எங்களிடம் பிணைக்கைதியாக இருக்கும் அஜ்மல்கானை கொலை செய்து விடுவோம் என்று தலீபான்கள் பாகிஸ்தான் அரசுக்கு மிரட்டல் விடுத்து இருக்கிறார்கள்.

தலீபான்களின் வீடியோ கேசட்

அஜ்மல்கான், வடமேற்கு எல்லைப்புற மாநிலத்தில் ஆளும் கட்சியாக இருக்கும் அவாமி தேசியக்கட்சியின் தலைவரான வாலி கானின் ஒன்று விட்ட சகோதரர் ஆவார். இந்த கட்சி தலீபான்கள் மீது ராணுவ நடவடிக்கை எடுப்பதற்கு ஆதரவாக இருக்கிறது. இதனால் தான் அவர் கடத்தப்பட்டார் என்று கூறப்படுகிறது.

தலீபான்கள் கடந்த திங்கட்கிழமை வெளியிட்ட வீடியோ கேசட் ஒன்றில் அஜ்மல்கான் பேசிய பேச்சு இடம் பெற்றுள்ளது. அதில் அவர் கூறி இருப்பதாவது:-

மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் அவாமி தேசியக்கட்சி தொண்டர்களுக்கும் ஒரு வேண்டுகோள். நீங்கள் எல்லோரும் தலீபான்களின் சாதாரண கோரிக்கையை நிறைவேற்றும்படி அரசாங்கத்தை வற்புறுத்த வேண்டும் என்று அந்த கேசட்டில் அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல