புதன், 10 நவம்பர், 2010

புயலுக்கு ஜல் என்று பெயர் வைத்தது ஏன்?

புயலுக்கு “ஜல்" பெயர் வைத்தது ஏன்? என்று தகவல் வெளியாகி உள்ளது. வங்கக்கடல் மற்றும் அரபிக்கடலில் உருவாகும் புயல்களுக்கு அகர வரிசைப்படி (ஆங்கில பெயர்களின்) 2004-ம் ஆண்டு முதல் பெயர் சூட்டப்பட்டு வருகிறது.

இதற்காக பிரத்யேகமாக குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம், மியான்மர், ஓமன், மாலத்தீவுகள் உள்ளிட்ட நாடுகளின் உறுப்பினர்கள் இடம் பெற்றுள்ளனர்.

இந்த நாடுகளின் வானிலை ஆய்வு நிறுவனங்கள், புதிதாக தோன்றும் புயல்களுக்கு பெயர் சூட்டும் வகையில் முன்கூட்டியே பெயர் பட்டியல்களை தயாரித்துள்ளனர்.

இதுவரை 29 புயல்களுக்கு பெயர் சூட்டப்பட்டுள்ளது. கடைசியாக உருவான புயலுக்கு வங்கதேசம் சார்பில் கிரி என்ற பெயர் சூட்டப்பட்டது.

பெயர் பட்டியலில் 30-வதாக இந்தியாவுக்கு கிடைத்த வாய்ப்பின்படி வங்ககடலில் உருவாகி உள்ள புயலுக்கு ஜல் என்று பெயரிடப்பட்டுள்ளது.

“ஜல்” என்றால் இந்தியில் தண்ணீர் என்று பொருள். எனவே சென்னையை நெருங்கிக் கொண்டு இருக்கும் “ஜல்” புயல் அடைமழையாக கொட்டுகிறது.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல