புதன், 10 நவம்பர், 2010

ஒருவரது வயது கூடிய தோற்றம் ஆரோக்கிய கேட்டின் அடையாளம் அல்ல

தனது உண்மையான வயதை விட இளமையாக தோன்றுவதே அனைவரது விருப்பமாகவும் உள்ளது.

ஆனால் ஒருவர் தனது வயதை விட சிறிது கூடிய தோற்றத்தைக் கொண்டிருப்பது அவரது ஆரோக்கிய குறைபாடுக்கான அடையாளம் அல்ல என்பது தமது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளதாக கனடாவின் சென் மைக்கல் மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

தமது வயதை விட கூடிய வயதான தோற்றத்தைக் கொண்டுள்ளவர்கள் ஆரோக்கியம் குறைந்தவர்கள் போன்று தென்படுகின்ற போதும், அந்த தோற்றப்பாடு உண்மையானது அல்ல என இந்த ஆய்வுக்கு தலைமை தாங்கிய மருத்துவக் கலாநிதி ஸ்டீபன் ஹவாங் கூறினார்.

ஒருவர் தனது வயதை சுமார் 5 வயது கூடுதலாக தென்படுவது அவர்களது ஆரோக்கிய கேட்டை குறிக்காத போதும், தனது வயதை விட தனது 10 வய துக்கும் அதிகமான தோற்றத்தைக் கொண்டிருப்பது ஆரோக்கிய கேட்டுக்கு சான்றாக அமையும் என இந்த ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

உண்மை வயதிலும் 10 வயதுக்கும் கூடிய தோற்றத்தை கொண்டிருப்பவர்களில் 99 சதவீதமானவர்கள் மிகவும் மோசமான உடல் மற்றும் மன ஆரோக்கிய பாதிப்பை உடையவர்களாக இருப்பதாக கூறப்படுகிறது.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல