திங்கள், 15 மார்ச், 2010

ஜோக்ஸ்

டாக்டர்: என்னங்க...எக்ஸ்ரேயில் உங்க வயிற்றில நிறைய சின்னச் சின்ன கரண்டியா இருக்கு?

வந்தவர்: நீங்க தானே டாக்டர் தினம் ரெண்டு ஸ்பூன் சாப்பிடச் சொன்னீங்க

****************
சர்வர்: சார்...என்ன சாப்பிடுறீங்க?

சாப்பிட வந்தவர்: நாலு கிலோ அரிசியும், ஒரு கிலோ உளுந்தும் ஆட்டிக் கொடுத்தால் என்ன டிபன் கொடுப்பியோ அதைக் கொடுப்பா...

***********************
ஒருத்தி: ஆம்பளை சமைத்து எனக்கு உட்கார்ந்து சாப்பிட பிடிக்காதுடி...

மற்றவள்: நீயே சமைத்து விடுவாயா..?

ஒருத்தி: இல்ல...டைனிங் ஹாலில் நின்று கொண்டே சாப்பிட்டு விடுவேன்

*********************
டைப்பிஸ்ட்: ஏன் சார்...இரண்டு நாளா உங்க மனைவிதான் சமைக்கிறார்களா..?

மானேஜர்: உனக்கு எப்படிம்மா தெரியும்..?

டைப்பிஸ்ட்: இரண்டு நாளா சாப்பாட்டை கீழே கொட்டி விடுகிறீர்களே...

**************************
ஒருவர்: என்னப்பா இட்லி மல்லிகைப் பூ போல இருக்கும்னு சொன்னே... நீலக் கலரா இருக்கே?

சர்வர்: சொட்டு நீலம் கொஞ்சம் அதிகமாயிடுச்சு சார்...

******************************
ஒருவர்: பாதிப்பேர் பந்தியில இருந்து பாதியிலேயே எழுந்து போயிட்டாங்களே..?

மற்றவர்: ஐம்பது ரூபாய் மொய் எழுதினவர்களுக்கு பாயசம் இல்லேன்னு சொல்லிட்டாங்களாம்...

*******************************
ஒருவன்: உங்கப்பாவிற்கு மணி அடிச்சா சாப்பாடுன்னு சொல்றியே...ஸ்கூல் வாத்தியாரா இருக்காரா..?

மற்றவன்: இல்லடா...வேலூர் ஜெயிலில் இருக்கிறார்..

Image Hosted by ImageShack.us

1 கருத்து:

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல