வெள்ளி, 8 அக்டோபர், 2010

30 நாட்களாக தேவாலய கூரையில் கவனிப்பாரற்று கிடந்த இளைஞனின் சடலம்

80 அடி உயரமான செங்குத்து பாறைக் குன்றிலிருந்து தரைமட்டத்திலிருந்த ஆலயக் கூரையில் விழுந்து உயிரிழந்த இளைஞர் ஒருவரது சடலம் 30 நாட்களாக கவ னிப்பாரற்று கிடந்த சம்பவம் பிரித்தானியாவில் இடம்பெற்றுள்ளது.

டெவொன் நகரில் தொர்குவே எனும் இடத்திலுள்ள சென் ஜோன்ஸ் தேவாலயத்தின் கூரையிலேயே ஜோன் ஹஸ்லிவூட் (John Hazlewood, 24 வயது) என்ற இந்த இளைஞர் விழுந்துள்ளார்.

சம்பவம் நடைபெற்ற போது ஜோன் ஹஸ்லிவூட் குடிபோதையில் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

அவர் பாறைக்குன்றிலிருந்து தவறுதலாக விழுந்தாரா அல்லது திட்டமிட்டே குதித்தாரா என்பது குறித்து தெரி வில்லை என பிராந்திய பொலிஸார் தெரிவித்தனர்.

கூரையில் ஏதோ குப்பை விழுந்து நாற்ற மெடுப்பதாக கருதி ஏணி மூலம் கூரையில் ஏறிய தேவாலய மேற்பார்வையாளர் ஒருவரே சடலத்தை முதன்தலாக கண்டு பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.
Image Hosted by ImageShack.us

1 கருத்து:

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல