புதன், 1 டிசம்பர், 2010

யாழில் ஒரே நேரத்தில் 3 வர்த்தக நிலையங்கள் கொள்ளை!

யாழ்ப்பாணம் ஏ 9 வீதியில் கைத்தடிச் சந்தி பகுதியில் நேற்று ஒரே நேரத்தில் வர்த்தக நிலையங்கள் மூன்று கொள்ளையிடப்பட்டுள்ளன..

முழுமையான பாதுகாப்பு மிக்க பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளமை பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது..

மதுபான விற்பனை நிலையம் உள்ளிட்ட மூன்று; வர்த்தக நிலையங்கள உடைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.. அண்மைக்காலமாக யாழ்ப்பாணத்தில் வர்த்;தக நிலையங்கள் பல கொள்ளையிடப்படுகின்ற சம்பவங்கள் அதிகரித்துவருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்..

அதேவேளை, தென்மராட்சியின் சாவகச்சேரி பகுதியில் பழைய கட்டிடங்களை இடித்தகற்றும் பணியில் ஈடுப்பட்டிருந்த வேளையில், அது இடிந்து விழுந்ததில் பொதுமகன் ஒருவர் பலியானார்..

நேற்று மதியம் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் பலியானவர் 33 வயதுடைய டேனியன் தேவன் என இனங்காணப்பட்டுள்ளார்.

பருத்தித்துறை சக்கொட்டியைச் சேர்ந்த இவர் இரண்டு பிள்ளையின் தந்தை என தெரிவிக்கப்படுகிறது.

பழைய கட்டிடம் ஒன்றை இடித்தகற்றும் பணியில் ஈடுப்பட்டிருந்த வேளையில், அந்த கட்டிடம்; பணியாளர்கள் மீது இடிந்து விழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது..

உயிரழந்த டேனியன் தேவனின் சடலம் சாவகச்சேரி காவல் துறையினரால் மீட்கப்பட்டு, யாழ்ப்பாண பேதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல