சீனாவில் உள்ள குவாங்சு நகரில் ஆசிய விளையாட்டு போட்டி நடந்தது. இதில், தற்காப்பு கலை போட்டியான “டேக்வோண்டோ'வின் 49 கி.கி., பிரிவில் தைவானின் யாங் ஜன், வியட்நாமின் தி ஹாவ் மோதினர். அபாரமாக ஆடிய யாங் 90 என முன்னிலையில் இருந்தார். போட்டி முடிய 12 வினாடிகள் இருந்த போது நடுவர்கள் திடீரென யாங்கை தகுதி நீக்கம் செய்தனர். இவர் அணிந்திருந்த எலக்ட்ரானிக் “சாக்சில்' விதிறைக்கு புறம்பாக கூடுதலாக ஒரு “சென்சார்' கருவி பொருத்தப்பட்டிருப்பதாகக் குற்றம்சாட்டினர்.
இதனை ஏற்க மறுத்த யாங், பயிற்சியாளர்களுடன் சேர்ந்து களத்தில் சிறிது நேரம் அமர்ந்திருந்தார். இதுவும் விதிறைக்கு புறம்பானது.
எனவே, இவருக்கு தடை விதிக்கவும் வாய்ப்பு உண்டு. ஆக்ரோஷமாக மோதிக் கொள்ளும் “டேக்வோண்டோ' போட்டியில் கால்களால் உதைக்கலாம். இதில், புள்ளிகள் வழங்குவதில் சர்ச்சை ஏற்பட்டது. இதையடுத்து வீராங்கனைகள் பாதுகாப்புக்காக அணியும் கவசங்கள் மற்றும் “சாக்சில்' எலக்ட்ரானிக் “சென்சார்' பொருத்தப்பட்டது. இதன் மூலம் கால் அல்லது கை பட்டால் “சென்சார்' மூலம் உணர்ந்து, துல்லியமாக புள்ளிகள் வழங்கப்பட்டன. இதன்படி தான் யாங், “சென்சார்' அணிந்து பங்கேற்றுள்ளார். போட்டி துவங்குவற்கு முன் “சாக்ஸ்' உள்ளிட்ட கவசங் களை சோதனை செய்த நிர்வாகிகள் “சென்சார்' பற்றி புகார் கூறவில்லை.
ஆனால், களத்தில் இறங்கி மோதிய போது தான், யாங் அணிந்திருந்த “சாக்சின்' குதிகால் பகுதியில் விதிமுறைக்கு புறம்பாக கூடுதல் “சென்சார்' பொருத்தப்பட்டிருப்பதாக குற்றம்சாட்டினர். இப்படி திடீரென புகார் கூறியதால், சீனாவின் சதி இருப்பதாக தைவான் நாட்டினர் கூறுகின்றனர். இதன் அதிபர் மா யிங்ஜியு கூறுகையில்,““யாங் உரிமைக்காக கேபினட் மற்றும் விளையாட்டு கமிஷன் பாடுபடும். நடுவர்களின் முடிவை தைவான் மக்கள் ஏற்க மாட்டார்கள். யாங்கிற்கு நியாயம் கிடைக்க சீன நிர்வாகிகள் வழி வகை செய்ய வேண்டும்,''என்றார்.
கடந்த 1949இல் நடந்த உள்ளூர் போருக்கு பின் தைவான், சீனா பிரிந்தன. தைவான் சுயாட்சியுடன் விளங்குகிறது. இது, தனது பகுதி என்று சீனா உரிமை கொண்டாடி வருகிறது. தைவான் என்பதற்கு பதிலாக “சீன தைபே' என்று தான் ஒலிம்பிக் உள்ளிட்ட சர்வதேச போட்டிகளில் பங்கேற்க வேண்டும் என்று நிபந்தனை விதித்துள்ளது.
தற்போதைய யாங் விவகாரம் சீனாதைவான் இடையே மீண்டும் மோதலை ஏற்படுத்தியுள்ளது.




கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக