புதன், 1 டிசம்பர், 2010

தென் கொரியாவில் மாடியிலிருந்து வீழ்ந்து இலங்கையர் மரணம்!

தென் கொரியாவில் பணியாற்றிய இலங்கையர் ஒருவர் 7 மாடிக் கட்டிடத்திலிருந்து வீழ்ந்து மரணமடைந்துள்ளதாக அறிவிக்கப்படுகிறது.

கொரிய அதிகாரிகள் இது தொடர்பாகத் தமக்கு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளதாகத் தென்கொரியாவிலுள்ள இலங்கைத் தூதுவர் லக்ஷித ஹெட்டிஆராச்சி தெரிவித்தார்.

2005 ஆம் ஆண்டு தொழில் வாய்ப்புப் பெற்று தென்கொரியா சென்ற அரநாயக்க பகுதி அலகல்ல என்ற இடத்தைச் சேர்ந்த நிஷாந்த குமார எட்டம்பாவெல என்ற 33 வயதான ஒருவரே இவ்வாறு மரணமானார்.

எனினும் இவரது மரணத்தில் சந்தேகம் நிலவுவதையடுத்து அந்த நாட்டு அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

விசாரணை முடிவடைந்த பின்னரே இறந்தவரின் சடலம் நாட்டுக்குக் கொண்டுவரப்படுமெனத் தெரிகிறது.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல