புதன், 1 டிசம்பர், 2010

மஹிந்த வெளியேறும் இடத்தை புலம்பெயர் தமிழர்கள் அறிந்திருக்கவில்லை

லண்டனில் ஜனாதிபதி ராஜபக்‌ஷவுக்கு தமது எதிர்பினைக் காட்ட முனைந்தவர்கள் எந்தவொரு நாட்டின் தலைவரோ அல்லது சிறப்பு பிரதிநிதிகளோ சாதரண பயணிகள் வெளியேறும் பகுதியினால் வெளியேற மாட்டார்கள் என்பதனை தெரிந்து கொண்டிருக்கவில்லை என ஜனாதிபதி செயலக கொள்கை ஆராய்ச்சி மற்றும் தகவல் திணைக்கள பணிப்பாளர் லூஷன் ராஜகருண தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச நேற்று முன்தினம் இரவு லண்டன் ஹீத்ரோ வானுர்தி தளத்திற்கு வந்ததை எதிர்த்து சுமார் 300க்கும் மேற்பட்ட புலம்பெயர் தமிழர்கள் ஒன்றிணைந்து விமான நிலையத்தில் சாதாரண பயணிகள் வெளியேறும் வாயிலில் ஆர்ப்பாட்ட போராட்டம் ஒன்றினை நடத்தியுள்ளார்கள்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஒக்ஸ்போர்ட் ஒன்றியத்தில் விஷேச உரை ஒன்றை ஆற்றுவதற்கும் அரசியல் தலைவர்களை சந்திப்பதற்கும் லண்டண் சென்றுள்ளார்.

இந்தநிலையில் ஆர்ப்பாட்டத்தின் மூலம் எதிர்பினை வெளியிட முயற்சித்த புலம்பெயர் தமிழர்களின் நடவடிக்கை வெற்றியளிக்க வில்லையென ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

ஆர்ப்பாட்டக்காரர்கள் இலங்கைக்கு எதிராகவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு எதிராகவும் புலிகளுக்கு ஆதரவான சுலோகங்களையும் ஏந்திய வண்ணம் கோஷம் எழுப்பினர்.

எனினும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இரவு 10 மணியளவில் ஹீத்ரோ வானுர்தி நிலையத்தை வந்தடைந்த போதும் ஆர்ப்பாட்டக்காரர்ளால் ஜனாதிபதிக்கு நேரடியாக தமது எதிர்ப்பை காட்ட முடியவில்லை.

நாடுகளின் தலைவர்கள் சாதாரண பயணிகளின் வருகை தரும் வழிகளை பயன்படுத்தமாட்டார்கள் என்பதை தெரிந்து கொள்ளாமலேயே இவர்களின் இந்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்காரணமாக பல்வேறு வானுர்திகளில் ஹீத்ரோ வானுர்தி தளத்திற்கு வருகை தந்த சாதாரண பயணிகள் தமது அதிருப்தியை வெளியிட்டதாகவும் ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல