புதன், 1 டிசம்பர், 2010

எழுத்தறிவை வளர்க்க 5 வயது சிறுமிக்கும் 6 வயது சிறுவனுக்கும் திருமணம் (படங்கள் இணைப்பு)

மாணவர்களிடையே எழுத்து திறமையை வளர்ப்பதற்காக 5 வயது சிறுமிக்கும் 6 வயது சிறுவனுக்கும் திருமணத்தை நடத்தி வைத்ததன் மூலம் பிரித்தானிய பாடசாலை யொன்று பெரும் சர்ச்சைக்கும் கண்டனத்திற்கும் உள்ளாகியுள்ளது. மாணவர்கள் தமது அனுபவங்கள் மூலம் எழுத்தாற்றலை பெறுவதை ஊக்குவிக்கும் தனது திட்டத்தின் ஒரு அங்கமாகவே வோர் செஸ்டர்ஷியலுள்ள வார்டன் ஆரம்பப் பாடசாலையானது இந்த திருமணத்தை நடத்தி வைத்தது.

காலி கியறி (வயது 5) என்ற சிறுமிக்கும் கேதின் பொக்ஸ் (வயது 6) என்ற சிறுவனுக்கும் அவர்களது பெற்றோரின் அனுமதியுடன் உள்ளூரிலுள்ள தேவாலயத்தில் திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளது.

இத்திருமணம் குறித்து மேற்படி பாடசாலையின் பிரதித்தலைவர் சாரா அலன் (29 வயது) விபரிக்கையில், ““எமது ஆசிரியர் ஒருவரே இத்திட்டத்தை முன் வைத்தார். முதலில் அது எமக்கு பைத்தியக்காரத்தனமான திட்டமாகவே தோன்றியது.

ஆனால் திருமணத்தின் போது நடைபெறும் சடங்குகள், அணியும் ஆடைகள் என்பன தொடர்பான மாணவர்களின் எழுத்து ஆற்றலை வளர்க்க இது ஒரு சிறந்த வழி முறையாக தென்பட்டது. இத்திருமணத்தில் பங்கேற்ற மாணவர்கள் தமது அனுபவங்களை எழுதி தமது சொல் ஆற்றலை விருத்தி செய்யக் கூடியதாக இருக்கும் என நம்புகிறோம்'' என்று கூறினார்.

மாணவர்களின் மத்தியில் சொல் ஆற்றலை விருத்தி செய்ய எத்தனையோ வழி முறைகள் உள்ள நிலையில் வளர்ந்தவர்களுக்கு உரிய திருமணத்தை சின்னஞ் சிறார்களுக்கு நடத்திய இந்த சம்பவமான சிறுவர்கள் இடையேயான பாலியல் நடவடிக் கைகளை ஊக்குவிப்பதாக அமையும் என “கிறிஸ்டியன் வொய்ஸ்' அமைப்பின் பேச்சாளர் ஸ்டீபன் கிறீன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல