புதன், 1 டிசம்பர், 2010

காதலை தேடி படகில் சமுத்திரப் பயணத்தை மேற்கொண்ட சிறுவர்கள் (படங்கள் இணைப்பு)


50 நாட்களாக பசுபிக் சத்திரத்தில் அலைந்து திரிந்த பின் உயிருடன் மீட்கப் பட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய 3 சிறுவர்கள், காதலுக்காகவே கடல் பயணம் மேற்கொண்ட இரகசியம் வெளியாகியுள்ளது.

இத்தகவலை மேற்படி சிறுவர்களில் ஒருவன் சகோதரரான லிலி பிலோ வெளியிட்டுள்ளார்.

நியூஸிலாந்துக்கும் ஹவாய்க்கும் இடையிலுள்ள தொகேலாயு தீவிலுள்ள அதாபு எனும் இடத்தைச் சேர்ந்த பிலோ பிலோ (15 வயது), சாவேல் பெலேஸா (15 வயது) மற்றும் எதுயானி நஸாயு (14 வயது) ஆகி யோர் 5 ஆம் திகதி இரவு 12 அடி நீளமான மீன்பிடிப் படகில் கடல் பயணம் மேற் கொண்ட வேளையில் சமுத்திரத்தில் காணாமல் போனார்கள்.

அன்றைய தினம் தமது தீவில் நடை பெற்ற “ரக்பி' விளையாட்டுப் போட்டி யொன்றுக்கு ஒத்தாசைகளை வழங்குவதில் ஈடுபட்டிருந்த இந்த சிறுவர்கள் அவ் விளையாட்டுப் போட்டியை கண்டுகளிக்க வந்த இரு சிறுமிகளை சந்தித்துள்ளனர்.

இந்த சிறுமிகள் இருவரும் தொகேலாயு தீவுக் கூட்டத்திலுள்ள 3 தீவுகளில் ஒன்றான நுகோனோயு தீவைச் சேர்ந்தவர்களாவர்.

விளையாட்டு முடிந்ததும் சிறுமிகள் இருவரும் தமது சொந்த தீவுக்கு புறப்பட்டு சென்றனர்.

மேற்படி சிறுமிகளிடம் மனதைப் பறி கொடுத்த பிலோ பிலோவும், சாவேல் பெலேஸாவும் சிறுமிகள் சென்றதும் அவர்களது பிரிவைத் தாங்காது இரவு அளவுக்கு மீறி மதுபானம் அருந்தியுள்ளனர்.

இந்நிலையில் இந்த சிறுவர்கள் இருவருக்கும் உடனடியாக குறிப்பிட்ட தீவுக்கு சென்று சிறுமிகளைக் காணவேண்டும் என்ற தீவிரம் ஏற்பட்டது. காதலால் வாடிய இந்த சிறுவர்களுக்கு உதவும் முகமாக அவர்களுடன் 14 வயது சிறுவனான எதுயானி நஸாயு இணைந்து கொண்டான்.

மேற்படி சிறுவர்கள் மூவரும் சகோதரர் களாவர்.

இரவு நேரத்தில் படகுப் பயணம் மேற் கொண்ட அவர்கள் காதலிகளின் தீவைச் சென்றடைவதற்கு பதிலாக வழிமாறிச் சென்றனர்.

எல்லை காண முடியாத சமுத்திர நீரில் செல்லும் திசை அறியாது தவித்த சிறுவர்கள், மழை நீரைக் குடித்தும் படகிலிருந்த தேங்காய்களையும் கடலில் பிடித்த மீனையும் உண்டு உயிர் வாழ்ந்துள்ளனர்.

சிறுவர்களைத் தேடி மேற்கொண்ட தேடுதல் பணிகள் தோல்வியில் முடிந்ததையடுத்து, அவர்களது பெற்றோர் அவர்கள் வரும் இறந்துவிட்டதாக கருதி அவர்களுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.

இந்த இறுதி அஞ்சலி செலுத்தும் நிகழ்வில் 500 பேர் வரை கலந்து கொண்டனர்.

தொடர்ந்து எவரும் எதிர்பாராத வகையில் இந்த 3 சிறுவர்களும் காணாமல் போன இடத்திலிருந்து சுமார் 1000 மைல் தொலைவில் பிஜி தீவுக்கருகில் மீன்பிடி படகில் சென்ற மீனவர் குழுவால் காப்பாற்றப்பட்டனர்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல